PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED AND DIVINE FRIDAY WITH THE BLESSINGS OF LORD KRISHNA & MAY PEACE AND LOVE FILL YOUR LIFE WITH JOY AND PROSPERITY .. " JAI SHREE KRISHNA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று மதியம்வரை ரோகிணி நட்சத்திரமும் கூடிவருவதால் ஸ்ரீகிருஷ்ணபகவானைப் பிரார்த்தித்து வாழ்வில் பரிபூரணமான நிறைவையும் .. நிம்மதியையும்
ஆனந்தத்தையும் தங்களனைவருக்கும் கருணைகூர்ந்த உள்ளத்தோடு அள்ளி வழங்குவாராக ..

ஓம் தாமோதராய வித்மஹே ! 
ருக்மணி வல்லபாய தீமஹி ! 
தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத் !! 

அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவே விஷ்ணுபகவான் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார் .. 

“ பரித்ணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்கிருதாம் 
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி ! யுகே ! யுகே “ 

“ எப்பொழுது எங்கு தர்மம் தலைசாய்ந்து அதர்மம் தலையோங்குகிறதோ ! அப்பொழுது அங்கு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நான் யுகம்தோறும் அவதரிக்கின்றேன் “ என்று பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் நேரிடையாகக் கூறியுள்ளதற்கிணங்க 
அவரின் அவதாரம் திகழ்கின்றது .. 

அவரின் எல்லா அவதாரங்களுமே அவரின் மூலவடிவத்தைப் போன்று சக்திமிக்கவைதான் .. அதாவது
ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து நாம் பல மெழுகுவர்த்திகளுக்கு ஒளியேற்றினாலும் .. அவை எல்லாமே ஒரேவித் சக்தியுடையதாக இருப்பதுபோன்றது இவ்வாறு அவர் எடுத்த அவதாரமே கிருஷ்ண அவதாரமாகும் .. 

இப்புண்ணிய தினத்தில் நாமும் கிருஷ்ணபரமாத்மாவை துதித்து இவ்வுலகில் நல்வாழ்வு வாழ்வதற்கும் .. மறுமையில் நற்கதி அடையவும் பகவான் பாதங்களை சரணடைவோமாக .. “ ஜெய்ஸ்ரீகிருஷ்ணா “ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment