PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamiye saranam...Guruve saranam...Panvel Balagane Potri Potri.GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF BHAGAVAN BRIHASPATHI .. MAY THE GOD OF WISDOM ENLIGHTENS THE MIND AND RELIEVE YOU FROM ALL THE AILMENTS AND NEGATIVE FORCES .. " JAI SHREE GURU DEV " ..


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
குருவருளும் .. இறையருளும் கூடிய இந்நன்னாளில் .. குருபகவானத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி இதுவரை வாழ்வில் சந்தித்து வந்த அனைத்து தோல்விகளிலிருந்தும் விடுதலை பெற்று .. எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெற குருபகவானைப் பிரார்த்திகின்றேன் .. 

ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே ! 
க்ருணி ஹஸ்தாய தீமஹி ! 
அதிதேவதா ப்ரயதியதிதேவதா ஸஹித 
ப்ரஹஸ்பதி க்ரஹாய நமஹ !! 

வியாழனுக்கு “ குரு “ என்றும் .. “ ப்ரஹஸ்பதி “ என்றும் 
சிறப்புப் பெயர்கள் உண்டு .. பிரஹஸ்பதி என்றாலே அறிவில் மிகச்சிறந்தவன் என்ற அர்த்தம் தொனிக்கும் .. 
நவக்கிரகங்களில் தலைசிறந்தவராக குரு கருதப்படுகிறார் 

பிரஹஸ்பதி தேவர்களுக்கு தலைவராகவும் .. குருவாகவும் இருப்பவர் .. பிரம்மாவுக்கும் பிடித்தமானவர்
இவருடைய ஸ்வரூப லக்ஷ்ணம் மிகவும் அற்புதமானது 
விந்தியமலைக்குமேல் குருவிற்கு ஆஸ்ரமம் உண்டு ..
சிந்துதேச அதிபதியாக இருப்பவர் ஆங்கீரச கோத்ரம் இவருடையது .. 

வடக்கு ஈசான்ய திக்குகளுக்கு அதிபதி ..எட்டு குதிரைகள் 
பூட்டிய தேரில் மேருமலையை வலம்வருபவர் .. இவருடைய நன்மதிப்பை பெறவேண்டுமானால் இந்திரனையும் .. பிரம்மனையும் வழிபட்டு வரவேண்டும் 

சூரியனுக்கு வடக்கில் நீளமான சதுரமண்டலத்தில் வடக்கு முகமாக வீற்றிருப்பவர் .. பாஷைகளில் சமஸ்கிருதத்தை தன்னுடையதாக கொண்டவர் குளுமையான வஸ்துவில் மிகப் பிரியம் உண்டு .. 
குரு என்ற சொல்லுக்கு ” அஞ்ஞானத்தைப் போக்குகிறவர்” என்ற பொருள் உண்டு .. ஜோதிட சாஸ்திரத்தில் 
“ குரு “ என்றால் வியாழபகவானையே குறிக்கும் .. 

எண்களில் ‘ 3 ‘ என்கிற மதிப்பை இவருக்கு ஜோதிட சாஸ்திரம் கொடுத்துள்ளது ..
“ பிரதி தேவோ ஜவலக்ரஹம் ” என்று வியாழபகவானை சொல்வார்கள் .. இதன் அர்த்தம் “ நம்மனதில் பிரதிபலிக்கின்ற தேஜோமய ஸ்வரூபத்தை காட்டுகிற கிரகம் எதுவென்று கேட்டால் அது குருபகவானுக்குரிய மண்டலம் என்று பளிச்சென்று சொல்லிவிடலாம் .. 

குருவானவர் பொன்வண்ண மேனியர் .. நான்கு திருக்கரங்கள் உண்டு .. கமண்டலம் .. அட்சமாலை யோகதண்டம் ..அபயம் .. என்பவற்றை அந்தக்கரங்களில் காணலாம் ..

குருகாயத்ரியை தினமும் பாராயணம் செய்கிறவர்களுக்கு எந்தகுறையும் வராது .. இருக்கின்ற குறைகளும் நீங்கிவிடும் .. உடல்வலிமை .. உளவலிமையைத் தருபவரும் இவரே ! தலைவணங்கா தலைமைப்பதவியையும் தருபவர் குருபகவானே ! 

குருபகவானைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் ! 
“ ஓம் குருவே சரணம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


 

No comments:

Post a Comment