PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM..GURUVE SARANAM..///GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY AND MAY YOU BE BLESSED WITH PEACE AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
ஆவணிமுதலாம் நாளும் .. புதன்கிழமையுமாகிய இன்று 
திருவோண நட்சத்திரமும் வருவதால் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த நாளுமாகும் ..பகவானைத் துதித்து
தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் நல்ஆரோக்கியத்துடன் திகழவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாஸுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது “ ஸ்ரவண விரதமாகும் “ .. 

தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத் தரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து வருபவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏதும் 
இருக்காது .. வாழ்வில் அமைதி நிலவிடும் .. உறவினர் கொண்ட பகை அகலும் .. 

108 திவ்யதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோயிலில் மாதமாதம் ” ஸ்ரவணம் “ என்ற விழா பிரசித்தம் .. “ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ .. 
“ என்னை சரணடைந்தால் உன்னை நான் காப்பேன் “ என்ற
சரமச்லோகப்பகுதி எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது .. 

தனக்கு ஒப்பாரும் .. மிக்காரும் இலார் என்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் .. ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் .. 

உப்பிலியப்பனைத் துதித்து சொல்லவேண்டிய ஸ்லோகம்
என் அப்பன் ! எனக்காய் இருளாய் .. என்னைப்பெற்றவளாய் .. பொன் அப்பன் .. மணி அப்பன் 
முத்து அப்பன் .. என் அப்பனுமாய் மின்னப்பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல் 
அப்பன் தந்தவன் தனதாள் நிழலே ! 

பொருள் -
பொன் .. மணி ..முத்து போன்றவன் என் தலைவனான இந்தப்பெருமாள் .. தன்பக்தனுக்கு உதவிசெய்வதில் ஒப்பாரும் .. மிக்காரும் இல்லாத தனித்தலைவன் .. என் தந்தை மதில்களால் சூழப்பெற்ற திருவிண்ணகர் என்ற இந்த திவ்யதேசத்தில் கொலுவிருக்கும் இவன் என் தலைவன் மட்டுமல்ல என்னைப்பெற்ற தாய் .. என்னை 
வளர்க்கும் தாய் .. தனது திருவடி நிழலால் எம்மை என்றென்றும் காப்பான் .. என்று உள்ளம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார் .. 

ஒப்பிலியப்பனைப் போற்றுவோம் ! குறைவில்லாத செல்வமும் .. அனைத்துத் துயர்களும் நீங்கி நலம் பெறுவோமாக ! ஓம் நமோ நாராயணாய ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment