பாலகன்  என்றுணர்வோர்க்கு
தாய் என மாறிடுவான் 
சேய் எமைக்காப்பது 
தாய் உந்தன் கடன் அன்றோ 
வாய் நிறைய சரணம் சரணம்  என அழைக்க 
கண் முன்னே வந்திடுவான்
தூயவன் அவன் புகழ் பாடு 
தூர ஓடிடும் துயரங்கள் மனக் 
காயங்கள் ஆற்றிடுவான் 
காமங்கள் போக்கிடுவான் 
வாழ்க்கைக்கு உதவாத 
பழக்கங்கள் அகற்றிடுவான்
குருவின் குருவாகி நின்றெம்மை 
கரு போலக் காத்திடுவான் 
கதி நீயே ஐயனே 
விதி மாற்றும் வள்ளலே
புவி மீது நாம் வாழ 
கூடும் இடர் தம்மை சபரி  
பதி வாழும் சித்தனே 
விரைவாகக் களைந்திடுவாய்

MALA DHARNA FUNCTION AT MUMBAI AND CHENNAI ON 30-10-2016 WITH THE BLESSINGS OF GS......





























குருவின் அருளால்
மாலை அணிந்தேன்
கை இருப்பினில்
இருப்பது நின்னருளே 
நெஞ்சக் கருவினில் 
திளைத்த ஆருயிரே
மெய் உருகி நின்னருள்
நினைத்து நின்றேன்
வாய் மூடி மௌனித்து
ஊமை ஆனேன்
குருவின் பூஜையில்
உன் பேரழகு 
கண்டு பிரம்மித்தேன்
குருவின் பேச்சினால்
தேய்ந்தன கவலைகள்
உன் முழு 
நிலவெனும் முகவழகால்
பாய்ந்தன கண்ணீர் 
அருவி போல
தீர்ந்தன என் ஆசையெல்லாம்
தீராத மெய்யருள் தந்ததனால்
ஆறாத நோய்களெல்லாம்
ஆறக் கண்டேன்
கசந்த வேப்பிலை
இனிக்கக் கண்டேன்
இகழ்ந்தோர் எல்லோரும் 
போற்றக் கண்டேன்
உதிர்ந்த பூக்கள்
மாலையாகுதம்மா
புதிர்களெல்லாம் விடை காணுதம்மா
உயர் சீலன் பாலகன்
எமைத் தேடி வந்த நேரமம்மா







MALA DHARNA DAY///CHENNAI AND MUMBAI TODAY...SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

தீப ஓளியேற்றி 
பாவம் தனைக் களைந்தாய்
தீய உள்ளமதை
தூயதாய் ஆக்கினாய்
தீபத்தின் மறுநாள் 
தீயதை போக்கும் நாள் 
குருவின் ஆசியுடன் 
மாலை அணியும் நாள்
காயங்கள் ஆற்றி
நேயங்கள் வளர்த்தாய் -நீ
மாலை அணிந்த எங்கள் 
பாவங்கள் பொசுங்கவே
சாற்றியது வாய் 
ஐயப்பா ஐயப்பாயென
காற்றிலே கலந்த
சரண கோஷங்கள் 
சென்னையிலும் மும்பையிலும் 
சேர்ந்து ஒலித்துடுமே 
பாலகன் மகிமைதனை
போற்றிய உள்ளங்களை

அருளிக்கும்  குருவினை 
உளமார சேவித்தோம்
நீரினில் ஏற்றிய 
தீபம் ஒளிர்ந்ததுன் அருளாலே
பாரில் ஓங்கியது உனதருள் 
உன் லீலைகளாலே
மாற்றியமைப்பாய் எம் தலைவிதி தன்னை
போற்றி ந்துகிறேன் உன் 
பொன்னடி தனையே
பன்வேல் குடியிருக்கும்
பரம தயாளனே....