PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

swamiye saranam iyyappa...guruve saranam...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY DUSSERA / VIJAYADASAMI & MAY ALL THE TENTIONS IN YOUR LIFE BURN ALONG WITH THE EFFIGY OF RAVANA / MAHISHASURA & MAY MAA DURGA DESTROY ALL THE EVIL FORCES AROUND & FILL YOUR LIFE WITH HAPPINESS & PROSPERITY .. " JAI MAA DURGADEVI "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் விஜயதசமி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. தாய்மையைப் போற்றி வழிபாடு செய்துவந்த நவராத்திரி விழாவும் இன்றோடு நிறைவு பெறுகிறது .. அன்னை துர்க்காதேவியின் ஆசியும் .. அன்பும் .. அரவணைப்பும் தங்களனைவரது வாழ்வில் என்றும் நிலைத்திடவும் .. மனவலிமை .. தன்னம்பிக்கை .. சகலசௌபாக்கியங்களும்
பெற்று வாழ்வைச் சீரானவழியில் கொண்டு நடத்த நல்லறிவும் பெற்றிட அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் 

அயிகிரி நந்தினி மேதினி 
விஸ்வ வினோதினி நந்தனுதே ! 
கிரிவர விந்த்ய ஸிரோதி நிவாஸினி 
விஷ்ணு விலாசினி ஜிஸ்துனுதே ! 
பகவதி ஹேஸிதி கண்ட குடும்பினி 
பூரி குடும்பினி பூரிக்ருதே ! 
ஜய ஜயஹே ! மஹிஷாசுரமர்தினி 
ரம்யகபர்தினி ஷைலஸுதே !! 

பொருள் -
இமவான் புத்ரியும் .. ஜடாமுடியுடன் திகழும் சிவபெருமானின் துணைவியும் மஹிஷாசுரனை சம்ஹரித்தவளுமான அன்னையே ! மஹிஷாசுரமர்தினியே ! உனக்கு வெற்றி ! உனக்கு வெற்றியே ! தாயே உனக்கு அனந்தகோடி நமஸ்காரம் !
எமை காத்தருள்வாயாக !! 

தசமி என்பதற்கு - பத்து என்பது பொருள் ..
விஜய என்றால் - வெற்றி .. வாகை .. வருகை என்று பலபொருள்கள் உண்டு .. இச்சாசக்தி .. கிரியாசக்தி .. ஞானசக்தி .. என்ற மூன்று சக்திகளாக அவதாரம் எடுத்து அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மஹாசக்தியாகத் தோன்றி மஹிஷாசுரனை வதம் செய்த நன்னாளே ! விஜயதசமி ! இன்று மஹாசக்தியான அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும் .. வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் ! 

நவராத்திரியில் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும் .. பக்தியுடனும் வழிபட்டவர்களது இல்லம்தேடி விஜயதமி நாளன்று மஹாசக்தி விஜயம் செய்து வெற்றியை தந்தருள்வாள் என்பதில் ஐயம் இல்லை .. எனவே இந்நாளில் எந்த காரியத்தைத் தொடங்கினாலும் ஜெயமாகமுடியும் என்பது நம்பிக்கை ..

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் .. பாடல் இசைக்கருவிகள் பயிற்சி .. நடனபயிற்சி .. பிறமொழி பயிற்சி .. புதிதாக ஒருதொழிலை கற்றுக்கொள்வது .. ஆகியவற்றை இந்தநாளில் தொடங்கினால் மஹாசக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகம் .. 

விஜயதசமிக்கு பலசிறப்புகள் இருக்கின்றன ..
அகில உலகையும் ஆட்டிபடைத்த மஹிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்து போர்செய்து விஜயதசமியன்றே நிறைவுற்றது .. தீயசக்தியான மஹிஷாசுரனை துர்க்காதேவி வதம் செய்தாள் .. சக்தியின் வெற்றித்திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது .. 

ஆட்சி .. அதிகாரம் .. நாடு உள்பட அனைத்தையும் இழந்த 
பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் .. ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் .. தாங்கள் இழந்தபலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது .. 

சீதையைத் தேடிச்சென்ற ராமர் சண்டிஹோமம் செய்து அன்னை துர்க்கையின் அருளைப்பெற்று ராவணாசுரனை இந்த விஜயதசமி நாளில் வதம்செய்தார் .. 
காமம் .. கோபம் .. தவறானவழி .. பேராசை .. கர்வம் .. பொறாமை .. மனகட்டுப்பாட்டின்மை .. ஞானமின்மை .. மன உறுதியின்மை .. அகங்காரம் இந்த பத்து தீயகுணங்களே ராவணின் அம்சமாக கருதப்படுகிறது .. அருளின் வடிவமான ராமபிரான் விஜயதசமி நாளில் இந்த பத்துதீமைகளையும் அழித்தார் .. 

துர்க்காதேவியை மனமுருகப் பிரார்த்தித்து எந்த செயலைத் தொடங்கினாலும் தீமைகள் விலகி நலங்களும் வளங்களும் வந்துசேரும் என்பது நம்பிக்கை 
துர்க்காதேவியைப் போற்றுவோம் ! நல்லருள் பெறுவோமாக !! ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment