கூடுகள் உறைந்திடும் பறவையைப் போல
உன்னடி உறைந்திட மனம் ஏங்குதய்யா
குருவின் பின் பாட்டுகள் பாடிய என் மனம்
சபரி வாசலை அடைய ஏங்குதய்யா

ஏடுகள் சொல்லி அறிந்ததல்லை உன் புகழ்
தேடினேன் என் குருசுவாமியின் மூலமாக உன்னை
என்னை நீயடைந்தாய் பின்னை
நாடியே வந்த துன்பம் தான் களைந்தாய்

கூடியே நன்மைகள் கிடைக்கச் செய்தாய்
கவி பாடியே உன்னை நான் துதித்தேன்
கூடினர் அய்யப்பமார் பாலகனை காண  
கூத்தனின் மகன் திருவடிக்கே எல்லாப் புகழும்

ஹரிஷின் இல்லத்தில் குருவின் கைவண்ணத்தில்  
ஹரிஹரன் பூக்களின் அரவணைப்பில் ஆனந்த் தாண்டவம்
ஆஹா அற்புதம்  காண கண்கோடி வேண்டும்
அன்றலர்ந்த மலர்களின்அனந்த சுவாசம்


காற்றிலே பறந்திட்ட மண் துகளாய்
இருந்திட்ட எங்களை ஆக்கினாய் சிறு துளியாய்
போற்றுவோம் என்றும் உன் பதமே
ஐயப்பனின் நாமம் சம்மதமே


No comments:

Post a Comment