நிதம் குரு அர்ச்னையிலே நீ உயர்ந்து நின்று
நீக்கமற நிறைந்து நின்று
நிவேதனம் செய்த பழத்தின் ருசி பார்த்து
நிசர்தனமாய் காட்சி தந்து உய்வளிகிராய்
கதியெமக்கில்லை என துயருற்ற உள்ளம் 

மதி ஒளியென உன் முகம் தினம் காண
 
விதிதனை நொந்த மனம் ஆறுதலடைய-பன்வேல்  
 
பதி வாழ்கின்ற அய்யனே சரணம்

No comments:

Post a Comment