GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY & A DIVINE MONTHLY SIVARATRI TOO .. MAY YOUR SUNDAY BE FILLED WITH LOVE & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH PANVEL BALAGANE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM





“ உமையவள் நேயனை உளமுருகி பணியுங்கள் !
இமைபோல் காத்திடுவான் ! இன்பங்கள் சேர்த்திடுவான் ! 
உயிர் அனைத்துள் உறையும் முழுமுதல் ஈசனை உருவமாய் அருவமாய் நிறைவுடன் துதியுங்கள் ! 
சித்தத்தை தெளியவைத்து சிந்தனையை சீர்படுத்தும் சிவகாமிநேயனை நித்தமும் துதியுங்கள் ! 
“ சிவ சிவ “ நாமத்தை சிந்தையில் இருத்துங்கள் ! 
செய்கின்ற காரியங்கள் செவ்வனே முடிப்பான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையும் தேய்பிறை சதுர்த்தசித் திதியுமாகிய இன்று ஈசனுக்கு உகந்த மாத சிவராத்திரியும் கூடிவருவது சிறப்பாகும் .. சிவபெருமானைத் துதித்து மனதில் அமைதியும் .. சுபீட்சமான நல்வாழ்வும் தங்களனைவருக்கும் அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சிவராத்திரி ஐந்துவகைப்படும் .. 
1 - நித்திய சிவராத்திரி 
2 - பட்ச சிவராத்திரி 
3 - மாதசிவராத்திரி 
4 - யோகசிவராத்திரி 
5 - மகேசனுக்கு உகந்த ” மகா சிவராத்திரியுமாகும் “
புராணங்களில் சிவராத்திரியைப் பற்றிப் பலகதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன அவற்றுள் ஒன்றைக் காண்போம் ! 
கயிலாயத்தில் அன்னை பார்வதிக்கு ஒருநாள் ஏதோ விளையாட்டு புத்தியால் பின்பக்கமாக வந்து சிவனின் கண்களைப் பொத்த சகலபுவனங்களும் ஒளியிழந்து இருள்சூழ்ந்தது ..
அம்பிகை திடுக்கிட்டுத் தன்பிழையை உணர்ந்து சிவனைப் பிரிந்து பூலோகம் வந்து தன் பிழைக்குப் பிராயச்சித்தமாக காஞ்சிபுரம் கம்பநதிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து பூஜைசெய்கிறார் .. திடீரென்று கம்பநதியில் வெள்ளம் வர மணல் லிங்கம் கரைந்துவிடுமே என்று அஞ்சி அப்படியே சிவலிங்கத்தை ஆரத்தழுவிக்கொள்கிறாள் .. அன்னையின் தவத்தை மெச்சிய சிவன் ஏகாம்பரநாதராக அம்பிகையை 
(இங்கே காமாட்சி) மாமரத்தடியில் மணம்புரிந்துகொள்கிறார் .. அந்தத் திருநாளே சங்கரனைக் கொண்டாடும் சிவராத்திரி என்பார்கள் ..
சிவபெருமானே ! நீரே என் உயிர் ! என்மனமே பார்வதி !
என்கருவி கரணங்களே உமது சேவகர்கள் .. என்னுடலே உமது வீடு ! என் அன்றாட செயல்கள் அனைத்தும் உமது வழிபாடு ! என் கால் நடக்கும் பாதையெல்லாம் உமது கோயில் பிரகாரம் .. என் பேச்செல்லாம் உமது பிரார்த்தனை .. மொழி .. இவ்விதம் என் எண்ணம் .. சொல் செயல் .. அனைத்தையும் உமக்கே அர்ப்பணிக்கிறேன் .. என்றும் பிரார்த்திப்போமாக !
நம் மனவீட்டில் விளக்காகத் திகழும் ஐந்தெழுத்து மந்திரம் “ நமசிவாயத்தை “ இயன்றவரை சொல்லி ஆயிரமாயிரம் நன்மைகளை வாழ்வில் பெறுவோமாக ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 

No comments:

Post a Comment