குருவே சரணம்
அன்னை
போல் அணைத்து
ஆற்றுப்படுத்துவீர்
தந்தையாய் இருந்து
தவறுகள் சுட்டிக்காட்டி
தரணியில் நல்லபடி வாழ வழிகாட்டி
ஆசானாய் உலகை எனக்குணர்த்தி
தலையில் செல்லமாய்க் குட்டி
பிழைகளைத் திருத்தி
நண்பனாய் தோளில் கை போட்டு
கனிவுடன் வழிகாட்டி
எந்தனை ஆளவந்த குருவே
உன் பாத கமலம் சரணம்
என் அன்னை செய்த தவமோ
என் கண்கள் உன்னைக் கண்டது
எத்துணை இடர் வரினும்
கதிர் கண்ட பனி போல் மறையச் செய்யும்
ஆற்றுப்படுத்துவீர்
தந்தையாய் இருந்து
தவறுகள் சுட்டிக்காட்டி
தரணியில் நல்லபடி வாழ வழிகாட்டி
ஆசானாய் உலகை எனக்குணர்த்தி
தலையில் செல்லமாய்க் குட்டி
பிழைகளைத் திருத்தி
நண்பனாய் தோளில் கை போட்டு
கனிவுடன் வழிகாட்டி
எந்தனை ஆளவந்த குருவே
உன் பாத கமலம் சரணம்
என் அன்னை செய்த தவமோ
என் கண்கள் உன்னைக் கண்டது
எத்துணை இடர் வரினும்
கதிர் கண்ட பனி போல் மறையச் செய்யும்
உன் கனிவான அறிவுரை கவலை மறக்க செய்யும்
நீ எனக்கு குருவாக கிடைக்க என்ன தவம் செய்தேன்
நான் அறியேன் குருவே
சரணம் சரணம்
No comments:
Post a Comment