PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " SANKADAHARA SADURTHI " .. MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & LIGHT UP YOUR LIFE WITH HAPPINESS .. & PROSPERITY .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "GURUVE SARANAM SARANAM...



குள்ளக் குள்ளனைக் குண்டுவயிறனை வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே ! கருணை வள்ளல் கணபதியைத் தொழ அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே ! முப்பழம் வெல்லம் மோதகம் தின்னம் தொப்பையப்பனைத் தொழ வினை இல்லை !
வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வருமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. யாராலும் அறிந்துகொள்ள முடியாத பரம்பொருளாகவும் .. எல்லாவற்றையும் அறியச்செய்யும் இறைவனாகவும் .. ஞான அருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியை சங்கடஹர சதுர்த்தி தினமாகிய இன்று போற்றித் துதித்து தங்களனைவரது வினைகள் யாவும் களையப் பெற்று .. குடும்பத்தில் சுபீட்சமும் .. தடைகளின்றி அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும்
விக்ன விநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
( பணிநிமித்தம் பதிவுகளைத் தொடர்ந்து பதிவிட முடியவில்லை .. விரைவில் பணிதீர்ந்து மீண்டும் தொடர்கிறேன் .. நன்றி )
விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிகச் சிறந்ததும் பமையானதும் .. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம் ..
புராணவரலாறு -
விநாயகர் ஒருமுறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்துகொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன் .. விநாயகரின் பெருத்த தொந்தியையும் துதிக்கையையும் .. அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்துவிட்டுப் பெரிதாயச் சிரித்தான் ..
தன்னைப்பார்த்து எள்ளி நகையாடியதைக்கண்ட விநாயகர் “ சந்திரனின் கலைகள் தேய்ந்தது போனவை தேய்ந்தவையாகவே இருக்கும் ” எனக் கூறவே ! மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும் தன்னுடைய தவறை நீக்கவும் சதுர்த்தித் தினத்தன்று விரதமிருந்து விநாயகரின் அருளைப் பெற்றான் ..
அப்போது விநாயகர் சந்திரனிடம் வளர்பிறை சதுர்த்தித் தினங்களில் உன்னைப் பார்ப்பவர்களுக்கு பாவம் சம்பவிக்கும் .. அதனைப் போக்கிக் கொள்ள தேய்பிறை சதுர்த்தியில் விரதமிருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும் என்றார் .. இதனையே சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது ..
இன்று விநாயகர் அகவல் .. விநாயகர் கவசம் .. காரிய சித்திமாலை அவற்றைப் பாராயணம் செய்வது சிறப்பைத்தரும் .. உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்து வாழ்வில் நலம் பல பெறுவோமாக !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Image may contain: one or more people

No comments:

Post a Comment