ஆடியிலே அன்னை வந்தாள் தேரினிலே ! அண்டமெலாம் ஆளும் சக்தி அசைந்து வந்தாள் ஊரினிலே ! கண்டவரின் மனம் மயங்க கனிந்து வந்தாள் மாரியம்மா ! வண்டாரும் குழலழகி வேண்டும் வரம் தாருமம்மா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. மூன்றாம் ஆடிச்செவ்வாய் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. பக்திகமழும் ஆடிமாதத்தில் அஷ்டசித்திகளையும் தங்களனைவருக்கும் தந்தருள்வாளாக !
ஓம் சீதளாயை ச வித்மஹே !
சூர்ப்பஹஸ்தாயை தீமஹி !
தந்நோ மாரீ ப்ரசோதயாத் !!
சூர்ப்பஹஸ்தாயை தீமஹி !
தந்நோ மாரீ ப்ரசோதயாத் !!
சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடிமாதத்தில் அதிகமாக இருக்கும் .. இம்மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம் ..
தமிழ்மாதங்கள் பன்னிரெண்டில் ஆனிமாதத்திற்கென்று ஓர் தனிச்சிறப்பு உண்டு .. பெண் தெய்வங்களைப் போற்றுதலுக்குரிய மாதமாக விளங்குகிறது ..
அம்மைநோய் என்பது கடும் வெயில்காலமான சித்திரை .. வைகாசி .. ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவகாலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும் .. அதற்குக் காரணம் அதீத வெப்பம் மற்றும் வறட்சியான காற்று ..
வெப்பம் மற்றும் வறட்சியினால் ஏற்படுகிற அந்நோய் மழைபெய்து .. மண் குளிர்ந்தால் தான் குறையும் .. அதனால் மாரி எனும் மழையை அவர்கள் தெய்வமாக உருக்கொண்டார்கள் .. பொதுவாக அம்மன் வழிபாடு என்பது கிராமப்புற மக்கள் .. விவசாயம் செய்யும் மக்கள் .. அறியாமையில் வாழ்ந்த மக்களின் வழிபாடாகத்தான் தொடங்கியது .. அந்தக்காலத்தில் அம்மை .. காலரா போன்ற நோய்கள் வந்து கொத்துக் கொத்தாக மனித உயிர்களைப் பலிவாங்கும் ..
அது எப்படி வருகிறது .. எப்படிப் பரவுகிறது என்று அறியாமலேயே அப்பாவித்தனமாக உயிர்களை இழந்தார்கள் .. அன்றைய மக்கள் அதிலிருந்து தப்பியவர்கள் மூலமாகத் தோன்றியதுதான் அம்மன் வழிபாடு .. அம்மைநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றுவது மாரியம்மன் தான் என்றும் .. காலரா நோயிலிருந்து காப்பாற்றுவது காளியம்மன் என்றும் முடிவுசெய்து அதற்கான உருவை அமைத்து வழிபாடு செய்து வேண்டிக்கொண்டார்கள் ..
இன்றைய நாளில் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாராயணம் செய்து சிறப்பிக்க தேவியின் அருள் தங்களனைவருக்கும் கிட்டும் .. கருணாரூபிணியாகிய அன்னையைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! ஓம் சக்தி ஓம் !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment