மங்களம் அனைத்தையும் தந்தருளும் அப்பனே !
மகிமை மிகும் என் ஐயனே ! வாசித்து நேசித்து பூசித்து வருவோரை வாழ்வித்துவரும் ஈசனே !
சங்கர சதாசிவ சடாதரன் மைந்தனே !
சக்தி சிவகாமி மகனே ! தன்னடி பணிந்தாரைத் தலைமேற் சுமந்தருளும் தயவுடைய மகராசனே !
இங்கு யாம் உன்னையே துணையாக நம்பினோம் !
எமது குறையாவும் களைவாய் !
இப்போதும் எப்போதும் தப்பேதும் வாராமல் எம்மை நீ காத்து வருவாய் “

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்களை அள்ளித்தரும் ஆடிமாத இறுதி வெள்ளிக்கிழமையும் .. முழுமுதற்கடவுள் விநாயகருக்கு உகந்த “மஹாசங்கடஹர சதுர்த்தி” விரதமும் கூடிவரும் இன்னாளில் தங்களனைவரது இன்னல்கள் யாவும் களைந்து .. சிறப்பான கல்வி அறிவு
நிலையான செல்வமும் அமைந்திட விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
நிலையான செல்வமும் அமைந்திட விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிரததினங்கள் இருந்தாலும் .. விரதத்தில் மிகச்சிறந்ததும் .. பழமையானதும் .. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய ”மஹாசங்கடஹர சதுர்த்தியில்” விரதம் இருந்தால் அளவுகடந்த ஆனந்தத்தை அடையலாம் .. சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் ..
விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணிமாத வளர்பிறை) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு
“ மஹாசங்கடஹர சதுர்த்தி “ என்று பெயர் .. வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்தபலன் ஒரு மஹாசங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யக் கிடைக்கப்பெறும் ..
“ மஹாசங்கடஹர சதுர்த்தி “ என்று பெயர் .. வருடத்தின் அனைத்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்தபலன் ஒரு மஹாசங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யக் கிடைக்கப்பெறும் ..
கோசாரப்பலன்களை அருளும் சந்திரபகவான் விநாயகரின் அருள் பெற்றதால் சந்திரபகவானின் நற்பலனாக நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் தடங்கல்கள் நீங்கும் ..
செவ்வாய்பகவான் வழிபட்டதால் அங்க்கரக (செவ்வாய்) தோஷபாதிப்புகள் திருமணத்தடைகள் நீங்கும் .. நல்ல மங்களமான நல்வாழ்வும் அமையும் .. சனிபகவானின் தோஷம் நீங்குவதால் ஆயுள்விருத்தி .. பணிகளில் பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் ..
விநாயகர் அகவல் .. விநாயகர் கவசம் .. காரியசித்திமாலை பாடல்களைப் பாடி விநாயகரை வழிபடலாம் .. இதில் எடுத்த செயல் வெற்றிபெறச்செய்யும் தனிச்சிறப்புடைய காரியசித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது .. கேட்டவரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும் ..
கல்வியிலும் .. செல்வத்திலும் மேம்பட்டு திகழ்வர் என்பது ஐதீகம் ..
கல்வியிலும் .. செல்வத்திலும் மேம்பட்டு திகழ்வர் என்பது ஐதீகம் ..
உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்தபாசங்களை நீக்கும் இயல்புடையவரும் .. அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும் .. வேதங்களையும் .. ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள்செய்தவருமாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம் !
ஓம் விக்னேஷ்வராய நமஹ !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment