SWAMY SARANAM GURUVE SARANAMGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY & A DIVINE " AJAA EKADASI " TOO .. MAY LORD VISHNU RELIEVE YOU FROM ALL SINS & NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH PEACE & HAPPINESS .. KING HARICHANDRA WHO'S LIFE BECAME MISERABLE WITH HIS PAST SINS .. WITH THE ADVICE OF GAUTAMA MUNI FASTED ON THIS " AJAA EKADASI " (ANNADHA) & REGAINED EVERYTHING .. " OM NAMO NAARAAYANAAYA "



” மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன் ! அரியதற்கும் மேலாக அரிதானவன் ! மிகுந்த சக்தி உள்ளவன் ! நிரந்தரமானவன் ! எவராலும் பக்தியால் அடையக்கூடியவன் ! ஒப்பற்றவன் ! முன்னைக்கும் முந்தையவன் ! ஒளிமயமானவன் ! ஞானிகளுக்கெல்லாம் முதன்மையானவன் ! பரமஞானஸ்வரூபமான விஷ்ணுபகவானை நமஸ்கரிக்கின்றோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
மங்களங்களை தங்கள் இல்லம்தோறும் வழங்கும் வெள்ளிக்கிழமையாகிய இன்று விஷ்ணுபகவானுக்கு உகந்த “ அஜா ஏகாதசித் திதியும் “ கூடிவருவது மிகவும் சிறப்பாகும் .. தங்களனைவரும் அனைத்து பாக்கியங்களும் பெற்று சர்வமங்களங்களோடும் .. சுபீட்சமான வாழ்வு வாழ்ந்திட ஸ்ரீமன் நாராயணனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
மஹாவிஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் முதன்மையானதாக இருப்பது ஏகாதசி விரதம் .. இன்றைய வாழும் அவசர உலகில் மாதந்தோறும் வரும் ஏகாதசியை அனுஷ்டிப்பது சாலச்சிறந்தது .. ஆகஸ்ட் - செப்டெம்பர் மாதத்தில் வரும் (தேய்பிறை)
கிருஷ்ணபட்சத்தில் அனுஷ்டிக்கும் ஏகாதசியை 
“ அஜா ஏகாதசி “ (அன்னதா) என்றழைப்பார்கள் .. பாபங்களைப் போக்கும் இப்புண்ணிய ஏகாதசியில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு புலன்களுக்கு அதிபதியான ரிஷிகேசரை வழிபட்டால் பாபத்தின் கர்மவிளைவுகளிலிருந்து விடுபடுவர் ..
தேவலோகத்திலும் இந்நாளுக்கு இணையான நன்னாள் வேறு ஒன்றும் கிடையாது .. இது சந்தேகமில்லாத உண்மையாகும் .. முற்பிறவிகளின் பாபங்களின் விளைவால் நாம் இப்பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களை உடனடியாக நீக்கும் வல்லமை கொண்டது ..
இவ்வுலகை வல்லமையுடன் ஆண்ட மாவேந்தன் ஹரிச்சந்திரன் பிணங்களிலிருந்து துணியை சேகரிக்கும் பணிக்கு கொண்டுவந்த விதியின் துர்ரதிர்ஷ்ட விளையாட்டையும் .. முற்பிறவியின் பாபங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று .. இழந்த ராஜ்ஜியத்தையும் எளிதில்மீட்டு .. மாயையால் மாண்டு மீண்டும் புத்துயிர் பெற்ற தன் மகன் .. மனைவி சந்திரமதி ஆகியோருடனும் ஆனந்தத்துடன் வாழ அஜா ஏகாதசியே காரணமாகும் .. அதன் பலனே தனி ..
இறுதியில் அரசனது உற்றார் .. உறவினர்கள் .. குடிமக்கள் அனைவரும் அரசனுடன் பக்திலோகத்தை அடையும் பேறுபெற்றனர் .. இந்தக் கதையைக் கேட்டும் படித்தும் வருபவர்களது பாபங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று .. அஸ்வமேதயாகம் செய்தபலனையும் அடைவர் ..
மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை நாமும் ஜபித்து அனைத்து பாபங்களையும் களைவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமோ நமஹ “ 
வாக வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
Image may contain: 1 person

No comments:

Post a Comment