PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA GAYATRI DEVI .. MAY THE ALMIGHTY GODDESS ILLUMINATE YOUR LIFE & LEAD YOU ALONG THE RIGHTEOUS PATH & REMOVE ALL YOUR PAINS & SORROWS TOO .. " JAI SHREE GAYATRI DEVI NAM




 இயங்குவை நிலைத்த தானே ! எல்லாமும் நீயே தாயே ! மயங்கியபோது வந்தே மதியினை நல்கும் தேவி! தயங்கியே தேவர் மூவர் தகுமறை முனிவர் போற்ற வணங்கிய தாளைப்பற்றி வணங்கியே ! வாழ்த்துகின்றோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. உலக நன்மையைக் கருத்திற்கொண்டு விஸ்வாமித்திரர் மகிமைகிக்க 
காயத்ரி மந்திரத்தை நமக்கு வழங்கினார் .. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் அதாவது இன்று “ காயத்ரி ஜெபம் “ வருகின்றது .. ஆன்ம நலம்பொழியும் அன்னை காயத்ரி தேவியைப் போற்றித் துதித்து நல்லாரோக்கியத்தையும்.. அஷ்டமா சித்திகளையும் தங்களனைவருக்கும் தந்தருள்வாளாக ..
ஓம் பூர்புவஸ்ஸுவ !
தத்ஸவி துர் வரேண்யம் !
பர்கோ தேவஸ் தீமஹி ! 
தியோயோன ப்ரசோதயாத் !!
பொருள் - 
எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ ! அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக ! என்பதே இம்மந்திரத்தின் பொருளாகும் ..
இன்றையநாளில் 1008முறை காயத்ரிமந்திரம் ஜெபிக்கவேண்டும் என்பது மரபு ..அன்றாடம் சந்தியாவந்தனத்தின் போதெல்லாம் முடிந்த அளவுக்கு காயத்ரி ஜெபம் செய்வது விசேஷமாகும்
தானத்தில் சிறந்தது - அன்னதானம் .. 
திதிகளில் சிறந்தது - துவாதசி ..
மாதங்களில் சிறந்தது - மார்கழி ..
அதுபோல் மந்திரங்களில் சிறந்தது காயத்ரி என்பார்கள் .. 
ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும் .. கீதையில் மந்திரங்களில் நான் “ காயத்ரியாக “இருக்கின்றேன் என்கிறார் ..
கௌசிகன் எனும் மன்னன் தன் தவப்பயனால் பிரம்ம ரிஷிபட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார் .. இவரே வரப்பிரசாதமான காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர் .. பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற அஸ்திரத்திற்கு காயத்ரி மந்திரமே ஆதாரம் .. இதை “ பிரம்ம தேஜோ பலம் “ எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர் ..
ஒருமுறை பிரம்மன் புஷ்கரம் என்னும் புண்ணிய ஷேத்திரத்தில் ஒரு யாகத்தைத் தொடங்கினார் .. அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதிதேவி வராததால் நான்முகன் தனது சக்தியால் 
ஸ்ரீகாயத்ரிதேவியை சிருஷ்டித்தார் .. காயத்ரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள் .. பிரம்மனும் தன் யாகத்தை முடித்தார் .. என்று புராணங்கள் கூறுகின்றன ..
இந்ததேவி செம்பருத்திப்பூ போன்ற சிவந்த நிறம் கொண்டவள் .. செந்தாமரையில் எழுந்தருளும் அன்னையான இவள் ஐந்து திருமுகங்களும் .. பத்து திருக்கரங்களும் கொண்டு திகழ்கிறாள் .. தன் பத்துகைகளில் வரஹஸ்தம் .. அபயஹஸ்தம் .. அங்குசம் .. சாட்டை (உற்புறமும் .. வெளிப்புறமும் உள்ள தீயசக்திகளை நீக்குவது) கபாலம் (சிவதத்துவம்) கதை (விஷ்ணு) சங்கு சக்ரம் இரண்டுகைகளில் தாமரை ஏந்தியவள் .. நான்கு வேதங்களையும் நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன .. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது ..
” காயத்ரி “ என்கிற பதம் - காய்+த்ரீ எனப் பிரிந்து பொருள்தரும் .. 
அதாவது “ காய் “ என்றால் - கானத்திற்கு உரியது 
பாடப் பெறுவது எனப் பொருள்படும் .. 
“ த்ரீ “ என்பது - த்ராயதே என்று விரிந்து காப்பாற்று எனப் பொருள்படும் .. அன்னை காயத்ரி தனது அபயகரங்களால் நமது பயத்தைப் போக்கியருள்வாள் ..
கா+ய+ஆ+த்ரீ (எனும் நான்கு எழுத்துகளின் சேர்க்கைதான் காயத்ரி ) 
இதில் கா - என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது இதற்கு அதிதேவதை பிரம்மா 
ய - என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது இதற்கு அதிதேவதை விஷ்ணு .. 
ஆ - என்பது காரணதேகம் .. இதன் அதிபதி ருத்ரர். 
த்ரீ - எனும் பதம் இம்மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றியருள்வர் என்பதைக் குறிக்கும் ..
எனவே ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி வழிபட மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம் ..
அறிவுக்கூர்மை பெறவும் .. ஞாபகசக்தி .. வளரவும் அச்ச உணர்வு அகலவும் .. எதிலும் வெற்றி பெறவும் விவேகம் ஏற்படவும் கைகண்ட மருந்தாக காயத்ரி மந்திரம் பயன்படுகிறது ..காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வாழ்நாள் முழுவதும் ஆனந்தமும் ..
அமைதியும் பெறுவோமாக ..
ஓம் சக்தி ஓம் .. ஜெய்ஸ்ரீ காயத்ரீதேவியே நமஹ .. 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 3 people

No comments:

Post a Comment