” கோல்வரை மத்தென்ன நாட்டிக் கோளரவு சுற்றிக் கடைந்தெழுந்த ஆலநஞ்சு கண்டவர் மிகவிரிய அமரர்கட்கருள்புரிவது கருத் !
நீலமார் கடல் விடந்தனையுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த சிலங்கண்டு ! நின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூறுளானோ “ (சுந்தரர்)
நீலமார் கடல் விடந்தனையுண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த சிலங்கண்டு ! நின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூறுளானோ “ (சுந்தரர்)
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த தேய்பிறை பிரதோஷ விரதமும் அனுஷ்டிப்பதால் மாலை 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷவேளையில் ஆலயம் சென்று பிரதோஷகாலப்பூஜையைத் தரிசிக்க அனைத்து பாபங்களும் நீங்கப்பெற்று .. உடல்நிலை .. மனநிலை அனைத்தும் சீராக எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சிவனுக்கு உகந்த விரதங்களுள் முக்கியமானது பிரதோஷ விரதமாகும் .. தேய்பிறை .. வளர்பிறை என இரண்டி பக்ஷ்ங்களிலும் வரும் அமாவாசை .. பௌர்ணமி இரண்டிற்கும் பிறகு வரும் பதின்மூன்றாம் நாளிலே இப்பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது
இவ்விரதம் மாலை நேரத்திற்குரியது ..
மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலமே பிரதோஷ காலமாகும் ..
இவ்விரதம் மாலை நேரத்திற்குரியது ..
மாலை 4.30 - 6.00 மணிவரையிலான காலமே பிரதோஷ காலமாகும் ..
மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை தன்னகத்தேயிருத்தி காத்தவேளையே பிரதோஷ வேளையாகும் .. இந்தவேளையில் சிவபெருமானையும் நந்தீஸ்வரரையும் வழிபாடு செய்வது சிறப்பு .. பிரதோஷவேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறப்பு குற்றங்கள் .. பாபங்கள் மற்றும் சகலதோஷங்களும் நீங்கப்பெற்று நலம் கிட்டும் .. பாவம் விலகி புண்ணியம் சேரும் .. வருமை அகலும் .. பயம் .. மரணவேதனை நீங்கும் ..
பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் ஈசனை வழிபட சகலதோஷங்களும் நீங்கிவிடும் .. சர்ப்பதோஷம் உட்பட் .. சிவனை தேவர்கள் மூவர்கள் வழிபடும் காலம் வளர்பிறை பிரதோஷம் .. அதேபோல் மானிடர்கள் வழிபடும் காலமே தேய்பிறை பிரதோஷமாகும் ..
பிரதோஷத்தன்று விரதம் இருப்பதால் உடல்நலம் நல்லாரோக்கியமாகத் திகழும் .. சந்திரன் சூரியனை நோக்கிப் பயணிக்கக்கூடிய காலகட்டமே அது ..
சிவபெருமானையும் .. நந்தீஸ்வரரையும் போற்றுவோம் ! வாழ்வில் நலம் பல பெறுவோமாக !
“ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ஓம் நமசிவாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment