PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM..GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY & A DIVINE INDIRA EKADASI TOO .. " INDIRA EKADASI " IS MEANT TO GET RID OF ONES SINS & IT ALSO GIVES SALVATION & PEACE TO THE SOULS OF OUR DEPARTED ANCESTORS & PREVAIL THEM & RELIEVE THEM FROM SINS TOO .. " OM NAMO NAARAAYANAYA "


” மேலானவற்றுக்கெல்லாம் மேலானவன் ! 
அரியதற்கும் மேலாக அரிதானவன் ! 
மிகுந்த சக்தி உள்ளவன் ! நிரந்தரமானவன் ! எவராலும் பக்தியால் அடையக்கூடியவன் ! ஒப்பற்றவன் ! முன்னர்க்கும் முந்தையவன் ! ஒளிமயமானவன் ! 
ஞானிகளுக்கெல்லாம் முதன்மையானவன் ! பரமஞானஸ்வரூபமான விஷ்ணுபகவானை நமஸ்கரிக்கின்றோம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
சனிக்கிழமையாகிய இன்று விஷ்ணுபகவானுக்கு உகந்த “ இந்திரா ஏகாதசித் திதியும் “ கூடிவருவது சிறப்பாகும் .. தங்களனைவரும் அனைத்து பாக்கியங்களும் பெற்று .. சுபீட்சமான வாழ்வுதனை வாழ்ந்திட எமை காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஏகாதசியை பித்ருக்களின் சாபத்தை நீக்கும் 
“ இந்திரா ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. இந்நாளில் விரத விதிமுறைப்படி உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிப்பவரின் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெறுவதுடன் .. பாவவினைகளின் காரணமாக துர்ரதிர்ஷ்டவசமாக நரகத்தில் தள்ளப்பட்டவரின் மூதாதையர்களும் விடுதலை பெறுவர் ..
தத்துவரீதியாக இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் தனது ஆத்ம விடுதலைக்காக மஹாவிஷ்ணுவின் நாம சங்கீர்த்தனை செய்யவேண்டும் .. பாவகர்மங்களின் வினையினால் நரகத்திலிருப்பவர் பகவானை அமைதியாக இருந்து தியானித்து பிரார்த்திக்க இயலாது .. நரகத்தின் தண்டனைகளின் விளைவுகளால் மனம் மிகவும் அலைகழிக்கப்படுவதால் அமைதி பெறுவது சிரமமாகும் .. ஆதலால் அவரின் உறவினர் எவராவது அவரின் பெயரில் தான தருமங்களை செய்தால் அவர் நரகத்திலிருந்து விடுதலை பெற்று சொர்க்கத்துக்குச் செல்வர் என்கிறது பிரம்ம வைவர்த புராணம் ..
இதைக்கேட்பவரும் படிப்பவரும் நிச்சயம் இவ்வுலக வாழ்க்கையில் அனைத்து சுகபோகமும் பெற்று தன் பாவ வினைகளிலிருந்தும் முக்தி பெற்று வாழ்வதுடன் இறுதியில் வைகுண்டத்தை அடைவர் என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா கூறியுள்ளார் ..
பகவானைப் போற்றுவோம் ! சகல நலன்களையும் பெறுவோமாக ! 
“ ஓம் நமோ பகவதே ! வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment