PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS ! WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE SANKASHTI SADURTHI ( SANKADAHARA SADURTHI ) TOO .. MAY LORD GANAPATHY REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE & SHOWER YOU WITH ABUNDANT GOOD LUCK .. BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA guruve saranam SWAMY SARANAM"

 விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேற்கை தணிவிப்பான் ! 
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணிற் பனிமின் கனிந்து “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்!
இன்று மாலைவரை தேய்பிறை சதுர்த்தித் திதி வருவதால் தும்பிக்கையானை நம்பிக்கையோடு துதித்து நம் சங்கடங்கள் யாவும் நீங்கி .. வாழ்வில் என்றும் வளம்பெற “ சங்கடஹர சதுர்த்தி “ நன்னாளில் விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
பிள்ளையாரை வழிபட சங்கடஹர சதுர்த்தி மிகவும் ஏற்றது .. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாளில் வரும் தேய்பிறை சதுர்த்தி நாளையே சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது .. “ ஹர “ என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள் ..
இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்டநாட்களாக தீராமலிருந்த நோய்தீரும் .. வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடையமுடியும் .. மிகச் சிறப்பான கல்வி அறிவு .. புத்திகூர்மை .. நீண்ட ஆயுள் நிலையான செல்வம் உண்டாகும் .. சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் என்றும் நம்பப்படுகிறது ..
ஆகவே சங்கடஹர சதுர்த்தி நாளாகிய இன்று அதிகாலையில் நீராடி விரதமிருந்து உணவைத் தவிர்த்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்குச் சென்று அங்கு விநாயகருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு .. சந்திரதரிசனம் செய்தபின்பு உணவுண்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும் .. விரதமிருக்க இயலாதவர்கள் நீராகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம் ..
ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடியைச் சரணமடைந்து அனைத்து பாக்கியங்களையும் பெறுவோமாக ! ஓம் விக்னேஷ்வராய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: one or more people

No comments:

Post a Comment