குருவின் கையாலே
மாலையிட்டேன் இந்நாளில்
அனுதினமும் உனை துதித்து
தொடங்கிடுவேன் விரதமே
பெருவழிப் பயணம் முழுதும்
வழித் துணையாய் வருவாய் பாலகா
வழித் துணையாய் வருவாய் பாலகா
தினம் தினம் உன் எழில் முகம் காண்கையிலே
என் எண்ணம் இலேசாகிப் பறக்குதய்யா
என்றுமே பழி பாவம் இல்லாத நல்ல
அமைதியைத் தாருமய்யா
வாய்மொழியின்றி
நிற்கின்றேன்
வாஞ்சையோடு குரு செய்யும்
பூஜையில்
உந்தன் அழகினைப்
பாடுதற்கு
உன்மத்தம் ஆகுதையா
உன்மத்தம் ஆகுதையா
இழந்திட ஏதுமில்லை
உந்தன் அருளொன்றே
நிலையாகும்
உன்னை புகழ்ந்து பாமாலை
நித்தமும் தருகின்றேன்
உந்தன் அருள் ஒன்றே போதுமைய்யா
உந்தன் அருள் ஒன்றே போதுமைய்யா
விதி மாற்றும் வள்ளலே
கதி தந்த சீலனே –சபரி
பதி தன்னில் வாழ்கின்ற ஐந்து மலை வாசனே
சரணம் சரணம் உந்தன் பதியே
சரணம்
No comments:
Post a Comment