PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM... GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE " UTPANNA EKADASI " TOO .. THIS IS THE DAY SRI EKADASI DEVI MANIFESTED HERSELF FROM SRI VISHNU & KILLED THE DEMON " MURA " .. SRI EKADASI DEVI ( SRIVISHNU BHAGAWAN'S MAHA SHAKTHI) HAS TAKEN A BOON FROM SRIVISHNU THE POWER TO DELIVER FROM THE GREATEST SINS THAT PERSON WHO FASTS ON THIS DAY .. STAY BLESSED .. " OM NAMO NAARAAYANAAYA ! OM HARI OM "


” பாயுநீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்டு மாயனார் திருநன் மார்பும் மரகத உருவும் தோளும் தூயதாமரைக் கண்களும் துவர் இதழ் பவளவாயும் ஆயசீர் முடியும் தேசும் அடியோர்க்கு அகலலாமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
செவ்வாய்க்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமஹாவிஷ்ணு பகவானுக்கு உகந்த ஏகாதசி விரதமும் கூடிவருவது சிறப்பு .. பகவானைத் துதித்து நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவவினைப் பயன்கள் மற்றும் தடை .. தடங்கல்கள் யாவும் நீங்கப்பெற்று .. நிம்மதியான வாழ்வுதனை தங்களனைவருக்கும் தந்தருளுமாறு பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
இன்றைய ஏகாதசித் திதியை “ உத்பன்ன ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. இதன் புராணக்கதை ஒன்று -
“ மூர் “ எனும் பெயர்கொண்ட மகாபயங்கரமான ராட்சதன் தோன்றினான் .. இந்திரன் முதலான தேவர்களை வெற்றி கொண்டு இந்திர பதவியையும் தேவலோகத்தையும் அபகரித்தான் ..
சிவபெருமானின் ஆணைப்படி தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட பகவானும் பல ஆண்டுகள் வரை போர்செய்தும் அரக்கனை வெல்ல இயலாமற் போகவே சிறிது ஓய்விற்காக பத்ரிகாஸ்ரமத்தில் ஹேமவதி என்னும் பெயர் கொண்ட குகையில் சயனத்தில் ஆழ்ந்தார் ..
அச்சமயத்தில் அக்குகைக்குள் நுழைந்த ராட்சதன் பகவானை கொல்ல முயற்சி செய்தபோது .. பகவானின் உடம்பிலிருந்து திவ்ய வஸ்திரங்களுடன் ஒரு மங்கை தோன்றி அரக்கனை நோக்கி ஓங்கார சப்தகர்ஜனையுடன் போர்புரிந்து அவனை அழித்தாள்
பகவானும் சயனத்திலிருந்து எழுந்து வந்து அனைத்தும் அறிந்து .. அரக்கனை வதைத்ததால் மூவுலகிலும் உள்ள தேவர்களுக்கு மகிழ்ச்சியையும் .. அவர்கள் இழந்ததையும் மீட்டு தந்தமைக்கும் ஏகாதசியில் பிறந்தமைக்கும் .. “ ஏகாதசி “ என்றே அழைக்கப்பெறுவாய் என்று அப்பெண்ணை வாழ்த்தியருளினார் ..
பகவானின் அங்கத்திலிருந்து தோன்றியதால் 
“ உத்பன்னம் “ என்றும் இப்புவியில் நீ உத்பன்ன ஏகாதசி என்னும் பெயரால் அறியப்படுவாய் .. யாரொருவர் இதனை அனுஷ்டிக்கின்றனரோ அவர்களது சகலபாபங்களும் அகன்று முடிவில் முக்தியைப் பெறுவர் என ஆசிகூறியருளினார் ..
“ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமோ நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment