PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD KAARTHIKEYAA .. MAY YOU BE SHOWERED WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

 
 
” நெகிழ்ந்து விடுகிறோம் உன்னை எண்ணுகையில் ! 
நெஞ்சம் எல்லாம் உனை ஸ்தோத்திரங்களால் துதிக்கையில் உனை நினைத்து பாடுகையில் ! 
நெக்குருகினோம் ! நீயே சகலமும் என சமர்ப்பிக்கையில் ! நெடும் வேலும் மயிலோடும் எமை ரக்ஷிக்கையில் ! 
நெற்றிக்கண்ணிலிருந்து உதயம் ஆன கார்த்திகேயா ! 
உனக்கு ஈடு வேறு எவருமில்லை ஷண்முகா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஐப்பசி மாத கார்த்திகை நட்சத்திரமும் .. ஞாயிற்றுக்கிழமையுமாகிய இன்று நாம் வேண்டிய வரங்களை அக்கணமே வேண்டியவாறே தந்தருளும் கார்த்திகேயனைப் போற்றித் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. நல்லாரோக்கியம் பெற்று சுபீட்சமான வாழ்வுதனை பெற்றிடவும் எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்திஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !!
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர் .. மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி அங்கு குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே ஆட்சி செய்கிறார் .. கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும் .. காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது ..
முருகப்பெருமானுக்குரிய விரதங்களுள் கார்த்திகை விரதம் நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுகிறது .. சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு நெருப்புப் பொறிகளைத் தோற்றுவித்தார் .. அப்பொறிகளை வாயுவும் .. அக்னியும் கங்கையில் சேர்த்தனர் .. அவை ஆறுகுழந்தைகளாக உருவாகின .. அந்தக் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சிவன் கார்த்திகைப் பெண்கள் அறுவரிடம் ஒப்படைத்தார் .. பிள்ளைகளைக் காணவந்த அன்னை பார்வதிதேவி அவர்களை வாரி அணைக்கவே அறுமுகமும் ஒருமுகமாயிற்று ..
அப்பிள்ளைக்கு “கந்தன்” என்ற திருநாமம் உண்டானது .. சிவபெருமான் முருகனை வளர்த்து ஆளாக்கிய கார்த்திகைப் பெண்களிடம் தங்களை நினைவுகூறும் வகையில் வானில் நட்சத்திரமண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாக என்றென்றும் நிலைத்து வாழ்வீர்கள் ! கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனை வழிபடுவோர் சகல சௌபாக்கியங்களையும் பெறுவர் என ஆசி வழங்கினார் ..
“ கார்த்திகைப் பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட தவப்புதல்வனே ! சரவணப்பொய்கையில் தவழ்ந்தவனே ! தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனே ! எமை என்றும் காத்தருள்வாயாக “ 
“ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment