PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...GURUVE SARANAM... .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A DIVINE KUMARA SHASHTI VIRADAM TOO .. MAY LORD GANESHAA RELIEVE YOU FROM ALL THE OBSTACLES & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


” வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க !
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க ! உள்ளம் தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க வா ! விநாயகனே ! ஆக்கமும் ஊக்கமும் அருள்வாய் கணேஷா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் குருவருளும் .. இறையருளும் கூடிய இவ் வியாழக்கிழமையில் கொடிய துன்பங்களை வேரறுப்பவரும் . விண்ணுலகிற்கும் .. மண்ணுலகிற்கும் நாயகானம் விக்னேஷ்வரனைப் போற்றித் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. தங்களனைவரது வினைகள் யாவும் யாவும் களையப்பெற்று மனதில் மகிழ்ச்சியும் .. அமைதியும் குடிகொள்ளவும் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
பிள்ளையார் பெருமைகள் :-
தொழில் செய்வோருக்கு பொறுமை மிகவும் அவசியம் பொறுமைக்கு பிள்ளையாரை மிஞ்ச ஒருவரும் கிடையாது . அந்த நம்பிக்கை தேவை .. யானையின் நடையைப் பார்த்தாலேஒருகம்பீரம் தோன்றும் .. யானை நடை யானைநடைதான் .. ஞாபக சக்தி யானைக்கு மிகவும் அதிகம் . அதுபோல் ஒரு வியாபாரிக்கும் ஞாபகசக்தி மிகவும் அவசியம் .. நமக்கும் பிள்ளையாருக்கும் உள்ள தொடர்பு என்றால் நாம் அவருக்குள்ளேயும் அவர் எமக்குள்ளேயும் இருக்கிறார் என்பதுதான் .. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவரும் தெய்வமும் அவரே !
“ கைவேழமுகத்தவனைப் படைத்தார் போலுங் கயாசுரனை அவனாற் கொல்வித்தார் போலும் ” 
( திருநாவுக்கரசர்) 
கயாசுரன் என அப்பர் பெருமானால் குறிக்கப்படுபவன் கஜாமுகாசுரனே ! கஜாமுகாசுரனைத் தொலைப்பதற்காகவே வேழமுகத்துடன் விநாயகப்பெருமானை ஈசன் படைத்தார் என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு ..
காலநேரம் கூடிவந்தவேளையில் விநாயகர் கஜாமுகாசுரனை வெற்றி கொண்டார் .. ஆணவம் மிகுந்துத் திரிந்த அவன் விநாயகரின் திருவடி தீட்சையால் மூஷிகமாகி நின்றான் .. அவனையே தன் வாகனமாகக் கொண்டார் .. கஜாமுகாசுரனுடன் போர்புரிந்த போது குருதி பூமியில் படிந்து செங்காடக ஆனது .. (அதனால் ஊர் திருச்செங்காட்டாங்குடி) கஜாமுகாசுர வெற்றிக்குப் பின் திருச்செங்காட்டங்குடியில் சிவலிங்கத்தினை ஸ்தாபித்து கணபதி வழிபட்ட திருக்கோயிலின் பெயர் கணபதீச்சரம் ..
கடுந்தவம் புரிந்த ராவணனுக்கு இலங்கை சென்று சேரும் வரைகீழே வைக்ககூடாது என்ற நிபந்தனையுடன் ஆத்மலிங்கத்தை வழங்கினார் ஈசன் 
அதன்படி இலங்கை திரும்பிக்கொண்டிருந்தான் ராவணன் .. அவன் தனது தலைநகரில் ஆத்மலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துவிட்டால் அவனை வெல்வது கடினம் என தேவர்கள் அஞ்சினர் .. அவர்களுக்கு அபயம் அளித்தவர் கணபதி ..
சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என ராவணன் யோசித்தவேளையில் சிறுவனாக அவன் முன் தோன்றினார் விநாயகர் .. ராவணனும் சிறுவனாக வந்த விநாயகரிடம் சற்றுநேரம் வைத்துக்கொ எனக்கூறி ஆத்மலிங்கத்தைத் தந்தான் . விநாயகரும் மூன்றுவரை எண்ணிவிட்டு ஆத்மலிங்கத்தைத் தரையில் வைத்துவிட்டார் .. லிங்கமும் அங்கேயே பிரதிஷ்டை ஆனது ..
விக்கிரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான் ராவணன் .. ஆனால் இயலவில்லை பசுவின் காதுபோலக் குலைந்தது .. சினமுற்ற அசுரவேந்தன் ஐங்கரனின் தலையில் குட்டினான் விநாயகர் வெற்றிப் புன்னகையுடன் காட்சித்தந்தருளினார் .. அத்தலமே கர்நாடக மாநிலத்திலுள்ள திருகோகர்ணம் .. அங்குள்ள கணபதி தலையிலும் இராவணன் குட்டிய வடுவினைக் காணலாமாம் ..

விநாயகனைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம் ! 
“ ஓம் கணேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .


No comments:

Post a Comment