PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SASRANAM....GURUVE SARANAM....GOOD MORNING .. WISH YOU ALL A DIVINE FRIDAY & A BLESSED EKADASHI & KUMAARA SHASHTI VIRADAM TOO . MAY THE BLESSINGS OF LORD GANESHAA BRING PROSPERITY & BEST HEALTH TO YOU ALL .. " JAI SHREE GANESHAAYA NAMAHA "


 அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதவி ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
மங்களங்கள் யாவும் தங்கள் இல்லம் தோறும் வாரி வழங்கும் வெள்ளிக்கிழமையும் .. பிரதோஷமும் கூடிவருவது சிறப்பாகும் .. விநாயகர் சஷ்டி விரதம் 12ம் நாளாகிய இன்று நம் துன்பங்களுக்கெல்லாம் காரணமான வினைகளின் வினைப்பயனைத் தீர்த்தருளும் விக்னவிநாயகரைத் துதித்து சகல துன்பங்களும் சூரியனைக் கண்ட பனிபோல நீங்கிடவும் .. சுபீட்சமான வாழ்வுதனை தங்களனைவரும் பெற்றிடவும் எல்லாம் வல்ல கணேஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி ! 
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகருக்கு பிரியமான மோதகத்தின் (கொழுக்கட்டை) வெளித்தோற்றம் மாவு .. ஆனால் உள் பாகத்தில் வெல்லமும் .. தேங்காயும் கலந்த சுவைமிக்க “ பூரணம் “ என்ற பொருள் இருக்கும் .. 
இதிலும் ஒரு தத்துவம் உள்ளது - 
மேலேயுள்ள மாவுப் பொருள்தான் - அண்டம் 
உள்ளேயிருக்கும் சுவையான பொருள் பரிபூரணமாகிய பரம்பொருளைக் குறித்து நிற்பதாகும் .. அதாவது நமக்குள் இருக்கும் இனிய நற்குணங்களை மாயை மறைக்கின்றது .. இந்த மாயையை உடைத்தால் பூரணத்துவமான நற்குணங்கள் வெளிப்படும் என்பதே இதன் பொருள் ..
விநாயகருக்கு முதன்முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது வசிஷ்டமுனிவருடைய மனைவி அருந்ததியே !
கணேஷனைப் போற்றுவோம் ! சகல நலங்களைப் பெறுவோமாக !
“ ஓம் ஸ்ரீகணேஷ்வராய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 2 people

No comments:

Post a Comment