SWAMY SARANAM....ANUGRAHA POOJA AT MUMBAI....GURUVE SARANAM..SARANAM.




















அருள் எனும் வெள்ளத்தில் நீந்தவந்தென்னை
அனுகிரஹ பூஜைமூலம் கரை ஏற்றிவிட்டாய்
பெருவழிப்பாதை என்கண் முன் தெரியுதே
குருவினாசி என்னை கைபிடித்து செல்லுதே
குளத்திலெறிந்த கல் போல் என்
நினைவலைகள் உன்னைச் சுற்றுதே-அருள்
வெள்ளத்தில் மூழ்க மனம் தவிக்குதே-பத்ம
பாதமிரண்டில் சரண்டைய ஆன்மா உருகுதே
சரணம் ஐயப்பா  என்றுந்தன் நாமம் சொல்ல
உயிரும் கரைந்து போகுதே
உந்தன் கோவில் வந்து கும்பிட்டதால்
பாவம் தொலைந்து போகுதே
பாழும் நெற்றி குங்குமம் சந்தனம் பூச  
நோய்கள் அற்றுப் போகுதே
குருவின் கற்பூர ஆரத்தி ஓளி மேலெழுந்து
உன்னழகைக் கூட்டுதே 
தினமும்  பூத்த பூக்கள் எல்லாம்
குருவின் பூஜை மூலம்
உன் பாதம் சேரத் துடிக்குதே
வானத்து விண்மீன்கள் ஒன்றாய்த்திரண்டு
உன் சிரசில் மாலை போடுதே
பம்பா  நதியும் உந்தன்
கால்கள் நனைக்க ஏங்குதே
சபரிமலை ஏற எண்ணும் மனதும் கிடந்து மாயுதே
கூடவே அழைத்து செல்லும் குருவின் பதம் பணியுதே
உன்னை கண்ட பின்பு  
உணர்வில்  கண்கள் கரையுதே
சரண கோஷம் வானை தாண்டி பிளக்குதே




No comments:

Post a Comment