PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARNAM......GURUVE SARANAM////WISH YOU ALL A BLESSED & A DIVINE " THIRUVAATHIRAI DAY " WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD SHIVA .. MAY HE FULFILL ALL YOUR DESIRES & REMOVE ALL THE SINS & NEGATIVE FORCES FROM YOUR LIFE .. " OM NAMASHIVAAYA" .. JAI BHOLE NATH


” திருவாதைரை நன்னாளில் அபிஷேகம் காண்பவரும் அழகிய உருவம் கொண்டவரும் !
சந்தனம் திரவிய அபிஷேகத்தால் மனம் மகிழ்பவரும் ஒருபாதத்தை மேலே தூக்கி நின்று ஆடுபவரும் ! காலனைச் சம்ஹாரம் செய்த காலகாலனும் ! 
வணங்கும் அன்பர்களின் மனக்கவலைகளைப் போக்கி அருள் செய்பவருமாகிய சிதம்பரப் பெருமானைப் போற்றுகின்றேன் ! போற்றி ! போற்றி ! போற்றி !
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
“ ஓம் “ என்ற பிரணவத்தின் வடிவமான நடராஜப் பெருமானுக்கு உகந்த சிறப்புமிக்க மார்கழித் திருவாதிரை நன்னாளாகிய இன்று .. காலைத்தூக்கிய பெருமானே ! தங்களனைவரையும் கைதூக்கி வாழ்வில் உச்சத்தைத் தொட அருள்வாயாக ! என்று பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் சித்ஸபேசாய வித்மஹே ! 
சிதாகாசாய தீமஹி ! 
தந்நோ சபேச ப்ரசோதயாத் !!
மாயா மலத்தை ஓட்டி .. கன்ம மலத்தை சுட்டு .. ஆணவமலத்தை அதன் வலிகெடுமாறு அழுத்தி .. ஆன்மாக்களை அருளாலே மேலே தூக்கி ஆனந்தக் கடலிலே மூழ்கியிருக்கச் செய்வதே இறைவன் ஆடும் தாண்டவத்தின் கருத்தாகும் ..
மார்கழிமாதம் திருவாதிரை நட்சத்திரம் சிவ வழிபாட்டிற்குரிய நாட்களில் மிகச் சிறந்ததாகக் கூறப்படுகிறது .. பத்து நாட்கள் நோன்பான திருவெம்பாவை மார்கழித் திருவாதிரையுடனேயே முடிவுறுவது வழமையாகும் ..
இந்நாளில் ஆடல் வல்லானுக்கு திருமுழுக்காட்டுதல் இடம் பெறும் .. இதை தரிசிப்பது மிகுந்த புண்ணியம் தரக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது .. ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்டமா விரதங்களுள் ஒன்று .. மார்கழி மாத மதிநிறைந்த நாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாபவிமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுதக் கலைகளால் ஆசீர்வதிக்கின்றான் ..
ஒரு சிறப்பு மற்றொரு சிறப்புடன் சேரும்போது அவற்றின் சிறப்பு பன்மடங்காகும் என்பதில் சந்தேகமில்லை .. அதே போன்றுதான் சிறப்பான மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோவில்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பன்மடங்கு பலன்களையும் .. வளங்களையும் .. நலன்களையும் வாரிவழங்கும் வழிபாடாக திகழ்கிறது ..
நடராஜரின் ஆருத்ரா தரிசனம் அவரது ஐந்தொழில்களான ஆக்கல் .. காத்தல் .. அழித்தல் .. மறைத்தல் .. அருளல் ஆகியவற்றை உணர்த்துவதாக அமைந்தது .. அதன் பொருட்டே கோவில்களில் ”பஞ்சகிருத்திய “ உற்சவம் நடந்து வருகிறது ..
நடராஜருக்கு நிவேதனமாக களிசெய்து படைப்பார்கள் 
களி - என்பது ஆனந்தம் என்றும் பொருள்படும் .. 
அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும் .. ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே ” திருவாதிரைக் களி “ நிவேதனமாகும் ..
புராணக் கதை -
ஒருசமயம் மஹாவிஷ்ணு திருப்பாற்கடலில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருந்தார் .. அன்னை மஹாலக்ஷ்மியும் உடன் இருந்தபோது .. கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென ஆஹா ! அருமை அற்புத நடனம் ! என்று மனமுறுகி கூறியபோது ஆதிசேஷனும் .. லக்ஷ்மிதேவியும் ஒன்றும் புரியாமல் வினவ .. திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தைத் தன் ஞானக்கண்களால் கண்டு தரிசித்ததைக் கூறினார் ..
ஆதிசேஷனுக்கும் அதனைக் காணவேண்டும் என பரவசம் அடையவே .. விஷ்ணுபகவானும் பூவுலகம் சென்று தவமிருந்து தரிசித்து விட்டு வரும்படி விடைகொடுத்தார்கள் .. ஆதிசேஷனும் பூலோகத்தில் 
பதஞ்சலி முனிவராக அவதரித்தார் .. இடுப்புவரை மனித உடலும்.. இடுப்புக்குகீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக அவரது உடலமைப்பு அமையப் பெற்றிருந்தது ..
பதஞ்சலி முனிவர் பலகாலம் தவமிருந்ததன் காரணமாக திருவாதிரைத் தினத்தன்று சிதம்பரத்தில் தன் திருநடனக் காட்சியை சிவபெருமான் பதஞ்சலி முனிவருக்குக் காட்டி அருளினார் .. அன்றைய தினமே 
“ ஆருத்ரா தரிசனமாகும் “
திருவாதிரைத் திருநாளில் சிவனைப் போற்றித் துதித்து பூஜித்தால் நல்ல கணவர் அமைவதாகவும் .. தாலிப்பலன் பெருகும் .. பாவங்கள் நீங்கும் .. அறிவும் ஆற்றலும் கூடும் என்பது ஐதீகம் ..

சிவனைப் போற்றுவோம் ! பலனாயிரம் பெறுவோமாக! 
“ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


No comments:

Post a Comment