PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM... GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE " MAASI MAHAM " MAASI MAHAM IS AN ANNUAL EVENT THAT OCCURS IN THE TAMIL MONTH OF MAASI ( FEB - MARCH) & THE STAR OF MAHAM .. WHOEVER TAKE A DIP IN THIS KUMBAKONAM TANK WILL GET RID OF SINS & ATTAIN MOKSHA .. ( PROVIDING FOOD FOR THE POOR IS THE BEST ) " OM NAMASHIVAAYA ! JAI BHOLE NATH "

( ஸ்ரீகும்பேஸ்வரர் துதி - கிரகதோஷங்கள் நீங்கி வேண்டிய வளம் பெற மாசி மகத்தன்று சொல்லவேண்டிய துதி)
“ எல்லா லக்னங்களுக்கும் அதிபதிகளான நவக்கிரகங்களுக்குத் தலைவராக இருப்பவரே ! கும்பேஸ்வரா ! உன்னை வணங்குகின்றோம் ! நவக்கிரகங்களால் பூஜிக்கப்படுபவரே ! எண்ணியதெல்லாம் தரும் காமதேனு மற்றும் அனைத்து தேவர்களாலும் வணங்கப்படுபவரே ! கும்பேஸ்வரனே ! உனக்கு எமது வணக்கங்கள் ! 
ஐந்து முகங்களையுடையவரே ! பிரளயகாலத்தில் மிதந்துவந்த அமிர்தகலயத்தை உடைத்து எல்லோருக்கும் எல்லா வளமும் வழங்கிய கும்பேஸ்வரா ! எமை காத்தருள்வாயாக “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ மாசிமகத் திருநாள் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. மகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிவரும் இப்புனிதமான நன்னாளில் சிவபெருமானைத் துதித்து நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி .. மகிழ்ச்சியும் செல்வாக்கும் மிக்க நல்வாழ்வு தங்களனைவருக்கும் அமைந்திட எல்லாம் வல்ல ஈஸ்வரனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாதேவாய தீமஹி ! 
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
எல்லா மாதத்திலும் “ மகம் நட்சத்திரம் ” வந்தாலும் மாசிமாதம் பௌர்ணமியில் வரும் “ மகம் “ நட்சத்திரம் மிகவும் பிரசித்திப் பெற்றது .. இந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கேதுபகவான் ஞானத்தையும் .. மோட்சத்தையும் அள்ளித்தரும் வல்லமை உள்ளவர் ..
மங்களகரமான மாசிமாதத்தில் எல்லா தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நாளுமாகும் .. அனைத்து கோவில்களிலும் சிவன் .. விஷ்ணுபகவான் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் .. யாகங்கள் .. உற்சவங்கள் நடைபெறுகின்றன ..
உமாதேவியார் அவதாரம் செய்த நாளாகவும் ..
பாதாளத்தில் இருந்த பூமியை பெருமாள் வராக அவதாரம் கொண்டு வெளிக்கொணர்ந்த நாளாகவும் ..
சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்தநாளாகவும் மாசிமகம் திகழ்கிறது ..
இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடந்து பிறவா வரம்வேண்டி இறைவனின் அருட்கடலை வேண்டும் நாள்தான் இந்நாள் .. ஆகையால்தான் மோட்சத்தை அருளக்கூடிய கேது பகவானின் நட்சத்திரமான மகத்தில் இந்நாள் அமைகிறது .. இதனை
“ கடலாடும் நாள் “ என்றும் .. 
” தீர்த்தமாடும் நாள் “ என்றும் அழைப்பார்கள் ..
இந்நாளில் குலதெய்வ .. இஷ்டதெய்வங்களை வணங்கி பலவிதமான தானங்களைச் செய்வது சிறப்பு 
பிதுர்க்கடன் செய்தால் அவர்களது பாபங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை ..
மனிதர்களாகிய நாம் செய்யும் பாவங்கள் புண்ணிய தலங்களில் உள்ள நீரில் நீராடி தான தருமங்கள் செய்தால் விலகிவிடும் ..
புண்ணிய தலங்களில் வாழ்வோர் அவ்விடத்தில் செய்யும் பாவங்கள் காசியில் சென்று கங்கையில் நீராட விலகும் ..
அந்தக் காசியில் வாழ்வோர் செய்யும் பாவங்கள் கும்பகோணம் வந்து நீராடினால் நீங்கும் ..
கும்பகோணத்தில் செய்யும் பாவங்கள் அங்கேயே நீராடினால் தான் போகும் .. அதனாலேயே உலகம் முழுவதும் வாழ்வோர் தாம் செய்த பாவம் நீங்கிட இம்மகாமகக் குளத்தில் நீராடிச் செல்கின்றனர் .. யமுனை .. சரஸ்வதி .. கோதாவரி .. நர்மதா .. சிந்து .. காவேரி உள்ளிட்ட பன்னிரெண்டு புண்ணிய நதிகளில் நீராடிய பலன்கிட்டும் ..
இன்று கந்தசஷ்டி கவசம் .. ராமாயணம் .. தேவாரம் .. திருவாசகம் .. காயத்ரி மந்திரம் .. மகாபாரதம் .. கந்தபுராணம் .. விஷ்ணுபுராணம் போன்ற புண்ணிய நூல்களியும் .. மந்திரங்களையும் பாராயணம் செய்வது சிறப்பு ..

சிவனைப் போற்றுவோம் ! சிவயோகம் பெறுவோம் ! 
“ ஓம் நமசிவாய “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: indoor

No comments:

Post a Comment