SWAMY SARANAM.. GURUVE SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY HE RELIEVE YOU FROM ALL THE NEGATIVE FORCES FROM YOUR LIFE & SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM MURUGA "

No automatic alt text available.Image may contain: indoor

சேந்தனைக் கந்தனை 
செங்கோட்டு வெற்பனை செஞ்சுடர்வேல் வேந்தனைச் 
செந்தமிழ் நூல் விரிந்தோனை 
விளங்கு வள்ளிகாந்தனைக் கந்தக் கடம்பனைக் 
கார்மயில்வாகனனை சாந்துணையும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாம் கந்தப்பெருமானைத் துதித்து தங்களனைவரது கவலைகள் யாவும் அகன்று என்றும் மகிழ்ச்சியுடன் திகழ எல்லாம் வல்லவனைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !!
முருகனுக்குத்தான் எத்தனை ரூபங்கள் -
சிறுகுழந்தைகளுக்கு - குமரனாகவும் 
இளைஞர்களுக்கு - சிங்காரவேலனாகவும் 
கலைஞர்களுக்கு - ஸ்கந்தனாகவும் 
வீரர்களுக்கு - வேலாயுதனாகவும்
இல்லறத்தார்க்கு - வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யனாகவும் 
உபதேசம் வேண்டுவோருக்கு - சுவாமிநாதனாகவும் 
துறவிகளுக்கு - பழனி ஆண்டவனாகவும் .. 
மேலும் பலரூபங்களில் நமக்கு வழித்துணையாகவும் வருவான் திருத்தணி முருகன் ..
கந்தனைக் கரம்குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும் .. காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது .. மலையேறி வந்து தன்னை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் உச்சத்தை அடைந்து எப்போதும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டுள்ளான் ..
முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத்தாலே மனம் ஆறும் .. நமது உடலில் ஆறுவிதமான ஆதாரங்கள் உண்டு .. முருகப்பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார் ..
திருப்பரங்குன்றம் - மூலாதாரம் 
திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம் 
பழனி - மணிபூரகம் 
சுவாமிமலை - அநாகதம் 
திருத்தணி - விசுக்தி 
பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை
முருகா முருகா என்று மனமுருகி வேண்டுவோர்க்கு நிலையான இன்பத்தினை அளித்திடுவான் கந்தனே ! 
“ ஓம் முருகா சரணம் ! கந்தா சரணம் ! 
ஓம் சரவணபவ ஓம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Image may contain: one or more people

No comments:

Post a Comment