” தேடுவாய் உலகத்தையாளும் தேவனின் ஒளிமயமான ஒளி உருவை ! பாடுவாய் ஹரிநாமம் !
ஓதுவாய் கண்ணனின் கீதை இடைவிடா பாவனையால் நல்லோர்மட்டிலே மனத்தை நிறுத்து
செல்வம் உண்டேல் ஏழைக்குதவு ! புலனும் மனமும் ஒழுங்குபட்டால் காண்பாய் உள்ளத்தினுள்ளேயே “
ஓதுவாய் கண்ணனின் கீதை இடைவிடா பாவனையால் நல்லோர்மட்டிலே மனத்தை நிறுத்து
செல்வம் உண்டேல் ஏழைக்குதவு ! புலனும் மனமும் ஒழுங்குபட்டால் காண்பாய் உள்ளத்தினுள்ளேயே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள்
குருவருளும் இறையருளும் கூடிய வியாழக்கிழமையாகிய இன்றைய தேய்பிறை எகாதசியை “ வரூதினி ஏகாதசி “ என்றழைப்பார்கள் .. இதனை அனுஷ்டிப்பதால் சகலபாவங்களும் நீங்கி சகல சௌபாக்கியங்களையும் தங்களனைவருக்கும் தந்தருள்வதாக !

ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
குருவார
விரதமும் .. ஏகாதசித் திதியும் இணைந்து வரும் இந்நாளில் துளசி .. வில்வம்
இரண்டையும் புனிதமான புண்ணிய தீர்த்த நீர் .. அல்லது ஊற்று நீரில் ஊறவைத்து
.. மூங்கில்குவளை .. வெள்ளித்தம்ளர் .. சுரைக்குடுவை போன்றவற்றில் நிரப்பி
இதனை மட்டுமே அருந்தி விரதமிருந்து பெருமாள் சிவமூர்த்திகள் இரண்டும் உள்ள
ஆலயத்தில் பூஜிப்பது மிகவும் விசேஷமானது ..
இன்றைய
ஏகாதசி வரூதிணி ஏகாதசி .. சகலபாவங்களையும் நீக்கி மங்களங்களை
அருளக்கூடியதும் பிறவிப்பெருங்கடலை கடக்கத் தோணியாக நின்று உதவும்
இந்நாளில் செய்யும் தானம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி ஆயிரம் மடங்கு
பலனைத் தரும் ..
இவ்வுலகில்
அன்னதானத்திற்கு ஈடான தானம் வேறெதுவும் இல்லை எனலாம் .. அன்னதானம்
பித்ருக்கள் .. தேவர்கள் .. மனிதர்கள் என அனைவருக்கும் திருப்தியையும்
மகிழ்ச்சியையும் அளிக்கிறது ..
ஒருவர் அன்புடனும் .. பாசத்துடனும் ஹோம அக்னிவளர்த்து இறை வணக்கத்துடன் மந்திரங்கள்
ஒலிக்க அணிமணிகளால் அலங்கரிக்கப்பட்ட கன்னியை தகுதியானவருக்கு கன்யாதானம்
செய்வதனால் கிட்டும் புண்ணியத்தைக் கணக்கிட சித்ரகுப்தனாலும் இயலாது ..
அத்தகைய மேன்மையான கன்யாதான புண்ணியபலனை வரூதினி ஏகாதசி விரதம்
அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் எளிதில் பெறலாம் ..
“ ஓம் நமோ பகவதே
வாசுதேவாய நமோ நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .
No comments:
Post a Comment