" குருவந்தனம் செய்வோம் ! தாய் தந்தை தோழனுமாய் உற்றதொரு வழித்துணையாய் நினைத்தும் வந்தெம்மை ஆட்கொள்ளும் குருபரா ! வேப்பந்தருநிழலில் அமர்ந்தே எமைக்காத்தாய் ! பூவுலகில் என்றுமுன் சமாதியில் இயங்குகிறாய் வணங்கும் உன் பக்தருக்கே ஆசிகள் பல அளிப்பாய் !
ஓம் குருநாதா ! ஜெய ஜெய சாய் ராம் “
ஓம் குருநாதா ! ஜெய ஜெய சாய் ராம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் “ குருபூர்ணிமா நல்வாழ்த்துகளும் “ உரித்தாகுக .. முழுநிலவு பொழியும் ஆடிமாதப் பௌர்ணமித் திருநாளில் முழுமை நிலையில் தனக்குள் இருக்கும் குருத்தன்மையை உணர (ஆத்ம) அனைத்து உயிருக்கும் சாதகமாக அமைந்த நாள்தான் “குருபூர்ணிமா” ..
குருபௌர்ணமி என்பது சாதாரண உயிர்கூட முழுமையை உணர்ந்து இறைநிலையை நோக்கி உயரக்கூடியத் திருநாள் .. எந்தவிதமான காரணமும் இல்லாமல் .. எந்தவிதமான பிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல் வெறும் கருணையினால் மட்டுமே நமக்கு ஞானச்செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு எமது அக வாழ்விற்கும் வழிகாட்டி .. தன்னையுணர வழிசெய்த அனைத்து குருநாதருக்கும் நன்றிக்கடன் செலுத்தக்கூடிய திருநாளே குருபூர்ணிமா இன்று குருநாதரின் பாதங்களின் அருகில் இருப்பதே பூர்வஜென்ம புண்ணியமாகும் ..
எனவே இவ்வாறான சிறப்பம்சங்களும் .. சர்வ வல்லமை பொருந்திய பூரணை தினத்தில் குருவினை எண்ணியிருந்தாலே கோடிபுண்ணியம் .. குருநாமம் ஜெபித்தாலே வினைகள் எல்லாம் தீரும் .. தாங்கள் பெற்ற கல்விச் செல்வம் மென்மேலும் வளர்ந்து தங்கள் வாழ்வும் ஒளிமயமாகத் திகிழும் ..
அவாறெனின் குருவினை சரணடைந்து குருவுடனிருந்து தியான ஜெபங்களில் ஈடுபட்டு .. குரு உபதேசம் கேட்டு .. குருவினால் வழங்கப்படும் அன்னப் பிரசாதத்தினை உண்ண வாய்ப்புக்கிட்டுமெனின் அது சர்வ நிச்சயமாக பூர்வஜென்ம புண்ணியங்களின் பலனேயாகும் ..
ஒவ்வொருவருடமும் வரும் குருபூர்ணிமா அல்லது வியாசபூர்ணிமா என்று அழைக்கப்படும் இந்நாளில் சன்னியாச ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாசபூஜை செய்து வேதவியாசரை ஆராதிப்பார்கள் வியாசர் என்றால் வேதங்களின் உட்பொருளை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் விளக்கமாக எடுத்துச் சொல்பவரை வியாசர் என்றழைப்பார்கள் ..
தவறாது குருபௌர்ணமியாகிய இன்று இறை ஆராதனைகளில் கலந்துகொண்டு எம்மையெல்லாம் ஆட்கொண்டு வழிநடத்தும் ஞானகுருவுக்கு நன்றி செலுத்துவதுடன் குருவின் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு இவ்வுலகின் துன்பக் கடலினைக் கடந்து செல்வோம் !
“ ஓம் நமோ பகவதே குருதேவாய நமஹ “
வாக வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் நமோ பகவதே குருதேவாய நமஹ “
வாக வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment