அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாய்க்கிழமையாகிய இன்று .. நமது வாழ்க்கை உயர்வதற்கு உதவி செய்துள்ள இறந்த நம் முன்னோர்களுக்கு நாம் நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும் “ மஹாளய பக்ஷ்ம் “ எனப்படும் மகிமைமிக்க புண்ணிய காலம் இன்றுமுதல் ஆரம்பமாகின்றது ..
பக்ஷ்ம் என்றால் - 15 நாட்கள் ..
மஹாளயம் என்றால் - மகான்களின் இருப்பிடம் .. இறந்து போனாலும் நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷ்ம் 15 நாட்களும் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக ஐதீகம் .. ஆகவே இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம் ..
மஹாளயம் என்றால் - மகான்களின் இருப்பிடம் .. இறந்து போனாலும் நமது முன்னோர்கள் இந்த மஹாளய பக்ஷ்ம் 15 நாட்களும் பூமிக்கு வந்து நம்முடன் தங்குவதாக ஐதீகம் .. ஆகவே இந்த 15 நாட்களும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம் ..
இன்றிலிருந்து புரட்டாசி அமாவாசை வரையிலான காலமே மஹாளய பக்ஷ காலம் அனுஷ்டிக்கப்படுகின்றது .. நமது மூதாதையர்களான பித்ருக்கள் தாம் நினைத்த போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது .. மாதப்பிறப்பு .. இறந்த அவர்களது திதி மற்றும் மஹாளயபக்ஷ தினங்களில்தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள் ..
எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்பண பூஜைகளை நிறைவேற்றிட அவர்களும் அதனை இங்கு நேரடியாகப் பெற்று எம்மை ஆசீர்வதிப்பார்கள் .. மஹாளயபக்ஷ் புண்ணிய காலத்தில் தவறான சிந்தனையை மறந்து நமக்காக தியாகங்கள் செய்த நமது முன்னோர்களை மனதார நினைத்து பித்ரு தர்பணம் செய்யவேண்டும் ..

நமக்காக வாழ்ந்தவர்களுக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தர்பணம் செய்வது புண்ணியத்தைத் தேடித்தரும் .. இந்த 15 நாட்களும் முன்னோர்களை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் நம்மைத்தேடிவரும் ..
பல்வேறு சிறப்புகள் மிக்க மஹாளயபக்ஷ் காலத்தில் நம் முன்னோர்களை நினைந்து பிதிர்வழிபாடு செய்து பிதுர் ஆசி .. குரு ஆசி .. தேவ ஆசி பெற்று பாவதோஷங்கள் .. தடை .. தடங்கல்கள் நீங்கப்பெற்று சுபீட்சமான வாழ்வுதனை வாழ்வோமாக !
“ ஓம் பித்ரு தேவோ பவ “
“ ஓம் பித்ரு தேவோ பவ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

