GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA DURGA .. MAY THIS DAY BE THE START OF YOUR GOOD LIFE & GOOD FORTUNE & FILL YOUR HEART WITH LOVE & MIRTH .. " JAI MATA DI

” வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள் 
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள் 
தாழ்வு நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே ! 
தேவி துர்க்கையே ! ஜெயதேவி துர்க்கையே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் மங்களகரமான வெள்ளிக்கிழமையாகிய இன்று சர்வலோக நாயகியை நவராத்திரியில் பூஜித்து தீமைகள் நம்மை அண்டாதவண்ணமும் .. தோல்விகளே தங்கள் வாழ்விலிருந்து தோற்றுப்போய் வெற்றிகளே குவியும் வண்ணம் அன்னை துர்க்காதேவி அருள்பாலிப்பாளாக !
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !!
துயரங்கள் நீக்குவதில் முதன்மையானது துர்க்கை அம்மன் விரத வழிபாடு .. பொதுவாக சிவாலயங்களில்
துர்க்கை அம்மனுக்கு தனி சன்னிதி இருப்பதைக் காணலாம் ..
துர்க்கா என்ற சொல்லில் - 
த்.. உ .. ர் .. க் .. ஆ .. - என்ற ஐந்து அட்சரங்கள் உள்ளன 
த் என்றால் - அசுரர்களை அழிப்பவள் .. 
உ என்றால் - விக்னத்தை (இடையூரை) அகற்றுபவள் 
ர் என்றால் - ரோகத்தை விரட்டுபவள் .. 
க் என்றால் - பாவத்தை நலியச் செய்பவள் .. 
ஆ என்றால் - பயம் .. சத்ரு ஆகியவற்றை அழிப்பவள் என்று பொருள் ..
மஹிஷாசுரனை வதம் செய்ய அன்னை தேவியாக .. வராஹியாக காட்சி தருகிறாள் .. தூம்ரலோசனன் சாம்பன் .. நிசும்பன் என்று தூதுவர்களை அனுப்பி அவர்களும் பராசக்தியுடன் போரிட்டு மாண்டதும் தானே போருக்கு கிளம்பி வருகிறான் ..
அன்னையை பலவாறாக மயக்க எண்ணி பலவடிவங்கள் எடுத்து போரிடுகிறான் மஹிஷாசுரன் இறுதியில் பராசக்தி அவனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினாள் .. அசுரனாக இருந்தாலும் அவனும் மோட்சம் என்ற நற்கதியை அடையவேண்டும் என அவன் தலைமீதே தன் திருப்பாதங்களை வைத்து அருள்பாலிக்கும் நிலையில் சூலம் ஏந்திய துர்க்கையாக வராஹி வடிவத்தில் காட்சியளிக்கிறாள்
இன்று வராஹியை பூஜிக்கும் இல்லங்களில் தன தான்யம் பெருகும் .. வாழ்வு சிறப்பாக அமையும் .. 
”ஓம் சக்தி ஓம் ! ஓம் துர்க்காய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment