” புகைமிகு பாரதம் இனியும் வேண்டாம் !
சுத்தம் சுழன்று சுகம் தரவேண்டும் !
அசுத்தம் அகன்று விடைபெறவேண்டும் !
பழையன போக்கிடவே ! புதியன புகுத்திடவே !
அழைப்போம் ! தழைப்போம் ! “ போகி நன்னாளிலே “
சுத்தம் சுழன்று சுகம் தரவேண்டும் !
அசுத்தம் அகன்று விடைபெறவேண்டும் !
பழையன போக்கிடவே ! புதியன புகுத்திடவே !
அழைப்போம் ! தழைப்போம் ! “ போகி நன்னாளிலே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. ” இனீய போகிப்பண்டிகை ” நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக தங்களனைவருக்கும் அமைந்திடவும் .. போதியளவு மழைபொழிந்து விவசாயத்தை பாங்குறச் செய்யவும் இந்திரபகவானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தேவராஜாய வித்மஹே !
வஜ்ரஹஸ்தாய தீமஹி !
தந்நோ இந்திர ப்ரசோதயாத் !!
வஜ்ரஹஸ்தாய தீமஹி !
தந்நோ இந்திர ப்ரசோதயாத் !!
இந்தப் பண்டிகை மார்கழி மாதத்தின் இறுதி நாளாகிய இன்று கொண்டாடப்படுகிறது .. இந்நாள்
” பழையனகழிந்து புதியன புகவரும் நாளாகக் “ கருதப்படுகிறது .. பழையவற்றையும் .. பயனற்றவைகளையும் விட்டொழிக்கும் நாளாகத் திகழ்கிறது .. பழந்துயரங்களை அழித்துப்போக்கும் பண்டிகை “போக்கி” என்றனர் .. நாளடைவில் மருகு “ போகி “ என்றாகிவிட்டது ..
” பழையனகழிந்து புதியன புகவரும் நாளாகக் “ கருதப்படுகிறது .. பழையவற்றையும் .. பயனற்றவைகளையும் விட்டொழிக்கும் நாளாகத் திகழ்கிறது .. பழந்துயரங்களை அழித்துப்போக்கும் பண்டிகை “போக்கி” என்றனர் .. நாளடைவில் மருகு “ போகி “ என்றாகிவிட்டது ..
இந்திரபகவானுக்கு “போகி” என்றொரு பெயரும் உண்டு .. மழைபொழியவைக்கும் கடவுள் வருணன் அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன் மழைபெய்தால் தான் பயிர்கள் செழிக்கும் .. உயிர்கள் வாழும் .. எனவே பண்டைய நாட்களில் இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது ..
இவற்றோடு பழைய பழக்கங்கள் .. உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் “ருத்ரகீதை ஞான யக்ஞம்” என அழைக்கப்படும் அக்னிகுண்டத்தில் எரிந்து பொசுக்கி தேவையற்ற பொருட்களை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் .. (தவறான சிந்தனைகளையும்) நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும் ..
பல்வேறு தெய்வீகக் குணங்களைத் தூண்டுவதன்மூலம் ஆன்மாவை உணர்தல் .. ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது ..
இந்திரனைப் போற்றுவோம் ! அவரது அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோம் !
“ ஓம் தேவராஜாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
“ ஓம் தேவராஜாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:
Post a Comment