SWAMY SARANAM,...GURUVE SARANAM

” குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு
குருதேவோ மஹேஷ்வரஹ ! குரு சாட்சாத் பரப்ரஹ்மா தஸ்மை ஸ்ரீகுரவே நமஹ “
பொருள் - பிரம்மா .. விஷ்ணு .. மகேஸ்வரர் இவர்கள் குருதேவர்கள் ஆவார்கள் .. குருவின் அன்றாட நடவடிக்கைகள் .. எண்ணங்கள் .. சொற்கள் ஆகியவைகள் உண்மையை பிரதிபலிக்கும் .. அதாவது இம்மூன்று குணங்களையும் கடந்தவர் மேன்மையானவர் என்று பொருள் .. அதனால் குரு பிரம்மா .. விஷ்ணு .. மகேஸ்வரர் என்று பொருள் ..

விளக்கம் - ஒழுக்கத்தை மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதால் அவர் பிரம்மாவாக கருதப்படுகிறார் .. மாணவர்களிடம் உள்ள நல்ல பழக்கங்களை பாதுகாப்பதால் அவர் விஷ்ணுவாக கருதப்படுகிறார் .. மாணவர்களிடம் உள்ள தீயகுணங்களை அழிப்பதால் அவர் மகேஸ்வரராக கருதப்படுகிறார் .. இந்த மூன்று பணிகளையும் செய்வதால் அவர் மும்மூர்த்திகளுக்கு சமமாக போற்றப்படுகிறார்
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ குருபூர்ணிமா “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. ஒவ்வொரு வருடமும் ஆனி .. ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு “ குருபூர்ணிமா “ அல்லது “வியாசபூர்ணிமா “ என்று அழைக்கப்படுகிறது .. இந்நாளில் சன்னியாச ஆசிரமங்களில் இருக்கும் சன்னியாசிகள் வியாசபூஜைசெய்து வேதவியாசரை ஆராதிப்பார்கள் ..
வாழ்க்கை முழுவதும் சன்னியாசிகள் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு குரு மற்றும் ஈஸ்வரனையும் வழிபடவேண்டும் .. ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையிலும் .. தான் துவங்கியிருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும் வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யவும் உகந்தநாளாகும் ..
உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின்மீது அதிக ஆசை .. அழியக்கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே பலபாடுகள்பட்டாக வேண்டியிருக்கிறது .. ஆனால் அழியாத சொத்தான ஞானத்தை நமக்கு அளிக்கவேண்டுமென்றால் அது யாரால் முடியும் குருவால் மட்டும்தான் முடியும் ..
குரு வெளி உலகத்தினருக்கு ஏழையாக .. எளியவராக .. சிறியவராக .. பித்தனாக .. பிச்சைக்காரனாக தெரியலாம் .. ஆனால் குருவிடம் இருப்பதோ எப்போதும் யாராலும் அழிக்கமுடியாத ஆனந்தமயமான பேரின்பமாகிய ஞானப் பொக்கிஷம் .. எந்தவிதமான காரணமும் இல்லாமல் .. எந்தவிதமான பிரதியுபகாரங்களையும் எதிர்பாராமல் .. வெறும் கருணையினால் மட்டுமே நமக்கு ஞானச்செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு எமது அகவாழ்விற்கும் வழிகாட்டி .. தன்னையுணர வழிசெய்த அனைத்து குருநாதருக்கும் நன்றிக்கடன் செலுத்தக்கூடிய திருநாளே குருபூர்ணிமா !
இன்று குருநாதரின் பாதங்களின் அருகில் இருப்பதே பூர்வஜென்ம புண்ணியமாகும் .. இறை ஆராதனைகளில் பங்குபற்றி எம்மையெல்லாம் ஆட்கொண்டு வழிநடத்தும் ஞானகுருவுக்கு நன்றி செலுத்துவதுடன் .. குருவின் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டு இவ்வுலகின் துன்பக்கடலினைக் கடந்து செல்வோம் !
“ ஓம் குருதேவாய நமோ நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 


Image may contain: 3 people, including Mrsmani Iyer

No comments:

Post a Comment