தத்துவமஸி



அனைத்து கோவில்களிலும் வாசலில் அந்த அந்த தெய்வத்தின் பெயர்தான் இருக்கும் ஆனால் சபரிமலையில் மட்டும் 18 படியேறி கொடி மரம் தாண்டியதும் சுவாமியே சரணம் ஐயப்பா என்று எழுதாமல் தத்துவமஸி என்று எழுத பட்டிருக்கும். ஏன் தத்துவமஸி என்று எழுதப்பட்டுள்ளது அதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.

41 நாட்கள் விரதம் இருந்து சிவனின் அம்சமான மூன்று கண்கள் கொண்ட தேங்காயில் திருமாலின் அம்சமான பசுவின் நெய் கொண்டு நிரப்பி இருமுடி கட்டி சைவ வைணவ சங்கமாம் ஐய்யப்பன் சன்னிதானம் நோக்கி நாம் பயணம் செய்கிறோம்.

எருமேலியில் தொடங்கும் நம் பாதயாத்திரை பல கரடுமுரடான வழித்தடங்களான அழுதை ,கல்லிடுங்குன்று, உடும்பாறை, இலவந்தோடு, கரிவலந்தோடு, கரிமலை, சிறிய யானை பெரிய யானை வட்டம் வழியாக பம்பையில் வந்து சேர்ந்து நீராடும் போது நம் வாழ்வில் நம்மை சூழ்ந்த பிரச்சனைகள் நம் முற்பிறவி கருமவினை அனைத்தும் நம்மை விட்டு நீங்கியது போன்ற ஒரு உணர்வு ஏற்படும் உண்மையும் இதுதான்.

பின்பு பம்பை கணபதியை வணங்கி அவர் அருளுடன் நீலிமலை ஏறும் போதே நமது உயிர் ஏங்க ஆரம்பிக்கும் ஐய்யனை கான சுவாமியே சரணன் ஐய்யப்பா தேகபலம்தா பாதபலம் தா என்ற சரண கோஷத்துடன் அப்பாச்சி மேடேறி மர கூட்டம் புகுந்து இராமனால் பாவ விமோசனம் பெற்று சபரி வரும் பக்தர்களை காத்தருளும் சபரி அன்னையை வணங்கி சபரி பீடம் தேங்காய் உடைத்து கன்னிமார்கள் சரங்களை குத்தி நாம் நடை போட நமது கண்களில் தெரியும் சன்னிதானம் விண்ணகம் அதிரும் சரண கோஷம்.... நம் உயிரை ஐய்யப்பனை நோக்கி இழுக்கும் காற்றினில் தவழ்ந்து வரும் நெய் மணமும் கற்பூர ஆழி மணமும்.

சன்னிதானம் அடைந்த உடன் முதலில் கற்பூர ஆழி முன்பு நின்று வணங்க வேண்டியது சன்னிதானம் முன்பு இருக்கும் கொடி மரத்தையும் அதன் மேல் இருக்கும் குதிரை வாகனத்தையும் வணங்க வேண்டும். குதிரை சாஸ்தாவின் வாகனம் என்பதால் அது கொடி மரத்தின் மேல் வைக்க படவில்லை .

குதிரை கொடி மரத்தின் மேல் இருப்பதன் பொருள். குதிரைகளை நாம் அதன் கண்களில் திரை கட்டிதான் அதனை நாம் எந்த வேலைக்கும் பயன்படுத்துகிறோம். கண்கள் திரை போட்ட குதிரையை வண்டியில் கட்டினால் அது நாம் சொல்லும் திசை நோக்கி செல்லும் திரை இல்லாத குதிரை அதன் போக்கில் போகும் நாம் சொல்வதை கேட்க்காது.

நமது மனமும் ஒரு குதிரை போல தான் எங்கெங்கோ ஒடி கொண்டே இருக்கும் அப்படி குதிரை போல் ஓடும் நம் மனதிற்கும் திரை போட்டு மனதை ஒரு முக படுத்தி எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டு ஐந்து புலன்கள் , ஐந்து பொறிகள் , ஐந்து பிராணன்கள் , மனது புத்தி, ஆங்காரம் ஆகிய 18 நிலைகளை கடந்து 18 படிகள் ஏறி சன்னதி முன்பு இருக்கும் கொடி மரத்தை வணங்கி சுற்றி வந்து சன்னதிக்கு முன்பு எழுத பட்டிருக்கும் தத்துவமஸி என்ற வார்த்தையை பார்த்துட்டு நாம் ஐய்யனை தரிசித்து நாம் கொண்டு சென்ற நெய் தேங்காயை உடைத்து அபிஷேகம் செய்யும்போது கடினமான தேங்காயின் ஓடும், அதன் உள்ளே இருக்கும் பழுப்பான உறையும் , அதன் உள்ளே இருக்கும் வெண்பருப்பும் மனிதனின் மூன்று குணங்களான தாமஸ, இராஜஸ , சத்வ குணங்களை குறிக்கும்.

இந்த மூன்று குணங்களையும் ஐய்யன் ஐய்யப்பனிடம் சமர்ப்பித்து விட்டு நிர்குணமான நிலையில் நமது ஆத்மாவை பரமாத்மாவுடன் கலக்க செய்ய வேண்டும் அப்போது நாம் உணருவோம் தத்துவமஸி என்பது

நீயே நான்

நானே நீ

இதுவே தத்துவமஸி.

சபரிமலை செல்பவர்கள் அந்த பயணத்தை ஒரு ஆன்மீக சுற்றுலாவாக செல்லாமல் முத்தி நோக்கிய ஒரு பயணமாக செல்லுங்கள் பரம்பொருளுடன் கலந்து விடுங்கள் சுவாமியே சரணம் ஐய்யப்பா

பொய்யின்றி மெய்யோடு
நெய்கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்.- சபரியில்
ஐயனை நீ காணலாம்

No comments:

Post a Comment