GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & A DIVINE FRIDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA DURGA .. MAY SHE RELIEVE YOU FROM ALL MISFORTUNES & CHERISH YOU WITH ALL ROUND SUCCESS & A HEALTHY HAPPY LIFE .. " JAI MATA DI "

” மனதால் எப்போதும் நினைப்பவர்க்கு அம்பாள் மாங்கல்ய பாக்யம் கொடுப்பாளாம் !
மும்முறை வலம்வந்து தொழுபவர்க்கு அம்பாள் முன்நின்று காத்தருள்புரிவாளாம் !
அடிமேல் அடிவைத்து அவளை வலம்வந்தால் அஷ்டசம்பத்தும் கொடுப்பவளாம் !
கற்பூரஜோதியை காண்பவர்க்கு அம்பாள் கைமேல் பலன்களை கொடுப்பாளாம் !
தீராத வினைகளை தீர்ப்பவளாம் தேவி திருவடி சரணம் சரணம் அம்மா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் அள்ளிக்கொடுக்கும் சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமையில் துள்ளித்திரியும் சிங்கத்தின்மேல் ஏறி பவனிவரும் தூயவளாம் அம்பிகையை வழிபட்டு .. தங்கள் இல்லங்களில் சுபகாரியங்கள் நடைபெற பிரார்த்திப்போமாக !
ஓம் காத்யாயனாய வித்மஹே !
கன்யகுமாரி தீமஹி !
தந்நோ துர்கி ப்ரசோதயாத் !!
பிறவி என்று வந்துவிட்டால் கஷ்டங்கள் .. துன்பங்கள் வரத்தான் செய்யும் .. துக்கங்கள் அதிகமாகும் .. அந்த துக்கத்தைப் போக்குபவளே துர்க்காதேவி ! மிகச்சிறிய விஷயத்திலிருந்து .. பெரிய பதவி அடைய முயற்சிக்கும் விஷயம்வரை நினைத்தது நடக்கவேண்டுமானால் துர்க்கையின் திருவடிநிழலைப் பிரார்த்திப்பதே சிறந்தவழி ..
வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறவும் .. சிறைவாசத்திலிருந்து விடுபடவும் .. துர்க்காதேவியை சரண்புகுந்தால் வெற்றியும் .. நிவாரணமும் சித்திக்கும்
பரசுராமருக்கு அமரத்துவம் அளித்தாள் துர்க்காதேவி .. அவளது உபாசனை மனத் தெளிவைத்தரும் .. துர்க்கையை அர்ச்சிப்பவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை .. மனத் தளர்ச்சியோ .. சோகமோ உண்டாவதில்லை ..
துர்க்கையைப் போற்றுவோம் ! வாழ்வில் துக்கங்களை மறப்போம் !!
“ ஓம் ஸ்ரீ துர்க்காயை நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
Image may contain: 1 person

No comments:

Post a Comment