” கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் ! உமாஸுதம் சோகவினாச காரணம் நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களகரமான வெள்ளிக்கிழமையில் .. ”விநாயகர் சஷ்டி விரதம்” இரண்டாம் நாளில் .. கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவரும் நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தந்தருள்பவருமான எல்லாம் வல்ல கணபதியைத் துதித்து பேரருள் பெறுவோமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
விநாயகரின் தோற்றமே தெய்வீகமானது .. புனிதப் பிறவியாகிய மனிதப் பிறவி எடுத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த விநாயகப்பெருமானுடைய திருவருளைப் பெறுவதற்கு வழிகாட்டுகின்ற புண்ணிய விரதமே இந்தப் பெருங்கதைப் பூஜை ..
இந்தப்பெருங்கதையை தொடர்ந்து படிப்பவர்களும் .. அருகிருந்து கேட்பவர்களும் இவ்வுலகில் சகல சௌபாக்கியங்களும் கைவரப்பெற்று .. எல்லா நன்மைகளையும் அடைந்து .. செல்வச்செழிப்போடும் .. சீருஞ்சிறப்போடும் நல்லபடி வாழ்ந்து .. இறையருளை நுகர்வர் என்று சொல்லப்படுகின்றது ..
தனக்குமேல நாயகன் இல்லாததால் “விநாயகர்” என்று பெயர் பெற்றவர் .. “கணபதி “ என்னும் திருநாமத்தில் - க - என்பது - ஞானத்தையும் .. ... ண - என்பது - ஜீவாத்மாக்களின் தலைவனாக பரப்பிரம்மசொரூபமாக இருப்பதைக் குறிக்கும் ..
விநாயகரை எந்த உருவத்திலும் வழிபடலாம் .. மஞ்சள்பொடியில் பிடித்துவைத்தாலும் .. களிமண்ணில் செய்தாலும் .. மரத்தில்செய்தாலும் அந்த உருவத்தின்மூலம் பிரத்யட்சமாக நமக்கு அருள்பாலிப்பார் .. எந்த தோஷமும் எமை அண்டாது .. தொலைந்துபோன உயர்ந்தபுகழ் .. செல்வாக்கு வந்துசேரும் .. எதையும் சாதிக்கும் ஆற்றல் கிட்டும் ..
விநாயகரைப் போற்றுவோம் ! எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி அளிக்கட்டும் !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment