பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே “
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகணபதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சனிக்கிழமையாகிய இன்று அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் என்னும் ஒளியைநோக்கி எமை அழைத்துச்செல்லும் ஞானபண்டிதன் கணேஷரை “ விநாயகர்சஷ்டி விரதம் “ 17ம் நாளில் வழிபட்டு வள நலம் பெறுவோம் !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
கடுந்தவம் புரிந்த ராவணனுக்கு இலங்கை போய்ச்சேரும்வரை கீழே வைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆத்மலிங்கத்தை வழங்கினார் ஈசன் அதன்படி இலங்கை திரும்பிக் கொண்டிருந்தான் ராவணன் .. அவன் தனது தலைநகரில் ஆத்மலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துவிட்டால் அவனை வெல்வது கடினம் என தேவர்கள் அஞ்சினர் .. அவர்களுக்கு அபயம் அளித்தவர் கணபதி ..
சந்தியாவந்தனம் செய்யவேண்டும் என ராவணன் யோசித்தவேளையில் சிறுவனாக அவன்முன் தோன்றினார் விநாயகர் .. ராவணனும் சிறுவனிடம் சற்றுநேரம் வைத்துக்கொள் ! எனக்கூறி ஆத்மலிங்கத்தைத் தந்தான் .. விநாயகரும் மூன்றுவரை எண்ணிவிட்டு ஆத்மலிங்கத்தை தரையில் வைத்துவிட்டார் .. லிங்கம் அங்கேயே பிரதிஷ்டைஆனது ..
விக்ரகத்தைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றும் இயலாமற்போனது .. பசுவின் காதுபோலக் குழைந்தது .. சினமுற்ற அசுரவேந்தன் ஐங்கரனின் தலையில் குட்டினான் .. விநாயகர் வெற்றிப்புன்னகையுடன் காட்சிதந்தருளிய அத்தலமே கர்நாடக மாநிலத்தில் உள்ள “ திருகோகர்ணம் “ அங்குள்ள கணபதி தலையிலும் ராவணன் குட்டிய வடுவினைக் காணலாம் ..
விநாயகரைப் போற்றுவோம் ! வினைகள் நீங்கப்பெறுவோம் !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment