மொழியின் மறைமுதலே முந்நயனத்தேறே கழியவரும் பொருளே ! கண்ணே செழியகலாலயனே எங்கள் கணபதியே ! நின்னை அலாலயனே சூழாதென் அன்பு “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ஆங்கிலப்புத்தாண்டு” நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! தங்களனைவரின் வாழ்வில் நல்லதே நடக்க .. நானிலம் சிறக்க .. மனித்நேயன் செழிக்க .. விக்னவிநாயகரை சஷ்டித் திதியும் .. “ வ்நாயக சஷ்டி “ இறுதி நாளிலும் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
கடந்த 12.12.2019ல் ஆரம்பமான “விநாயகசஷ்டி விரதம் “ இன்றைய சஷ்டித் திதியுடன் நிறைவு பெறுகிறது .. முதல் 20 நாட்களும் ஒருபொழுதேனும் உணவு உண்டு வந்தவர்கள் இறுதிநாளாகிய இன்று உபவாசமிருந்து நாளை விடிய சுவாமிதரிசனம் செய்து உணவு உண்டபின் விரதத்தை நிறைவு செய்வது வழக்கம் ..
கடந்த 21 நாட்களும் விநாயகரது கதைகளைப் படித்தும் .. கேட்டும் வந்த தங்களனைவருக்கும் விநாயகரது அருட்கடாக்ஷ்ம் பெற்று வள நலம் பெறுவீர்களாக ! மற்றும் .. 21வது நாளில் சஷ்டிதிதியும் கூடும் நேரத்தில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னதியில் இந்த விரத வழிபாட்டின்மூலமாக தனவிருத்தியும் .. தான்யவிருத்தியும் .. இனத்தார்பகைமாறுதலும் .. எடுத்தசெயல்களை எளிதில் முடிக்கும் ஆற்றலும் பெருமைமிக்க வாழ்க்கையும் அமையும் ..
மங்களம் தரும் விநாயகப்பெருமானே ! இன்றுபோய் வரும் ஆண்டில் மீண்டும் திரும்பிவருக ! என்பதனையே “ கணபதி பப்பா மோரியா “ என்கின்றனர் .. மீண்டும் சந்திப்போம் கணேஷா !
“ ஓம் விக்னவிநாயக பாத நமஸ்தே “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No photo description available.

No comments:

Post a Comment