கனு பண்டிகை - ஒரு கண்ணோட்டம்
பொங்கலுக்கு அடுத்த நாள் கனு பண்டிகை. அன்று காலையில் எழுந்து பெண்கள்( தாங்கள் குளிப்பதற்கு முன்) தங்களது அண்ணன் தம்பிகள் குடும்ப நலன்கள் வேண்டி கனு பிடி வைப்பது வழக்கம்.
கனு பண்டிகை அன்று சூரிய ஒளி படும் ஒரு இடத்தில் மஞ்சள் இலையை, பரப்பி அதன்மேல் பழைய பொங்கல், கூட்டு, பல வண்ண சாதங்கள்( சோறு), கரும்பு, வாழைபழம் முதலியவற்றை வைத்து நிவேதனம் செய்து, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து வணங்குவது என்பது நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு இன்றும் தொடர்கிறது.
இது ஒரு வகையான திருஷ்டி(கண்ணூறு) கழித்தலாகும்.
தமது குடும்பம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டி கனு பிடி வைக்கும் தமது சகோதரிகளுக்கு அண்ணன் தம்பிகள் பொங்கல் சீர் செய்வது என்பதும் இன்றும் வழக்கில் உள்ளது. "பெண் வாழ பிறந்தகம் வாழ" என்று கூறுவார்கள் . நமது சகோதரிகள் நலமாக இருந்தால் அவள் பிறந்த வீடான நமது வீடும்(குடும்பமும்) நலமாக இருக்கும்.
அண்ணன் தம்பி நல்வாழ்விற்கு சகோதரிகளும், அக்காள் தங்கை நல்வாழ்விற்கு அண்ணன் தம்பிகளும் வேண்டி கொண்டாடும் அருமையான பண்டிகை இந்த பொங்கலும் கனு பண்டிகையும்.
குடும்ப ஒற்றுமை வளர்வதற்கும் சகோதர பாசம் நிலைப்பதற்கும் கனு பிடி வைத்தலும், பொங்கல் சீரும் பெரும் பங்கு வகிக்கின்றன என்றால் மிகையாகாது.
சகோதரிகளே! உங்கள் அண்ணன் தம்பிகள் குடும்ப நலனுக்கு கனு பிடி வையுங்கள்.
சகோதரர்களே! உங்கள் அக்காள் தங்கைகளுக்கு மறக்காமல் இந்த பொங்கலுக்கு நேரில் சென்று சீர் கொடுங்கள். உங்கள் வாழ்வு சீரும் சிறப்புமாக இருக்கும்.
No comments:
Post a Comment