பைந்தமிழ்பூமி செழித்திடல்வேண்டும் ! புகைமிகுபூமி இனியும் வேண்டாம் ! சுத்தம் சுழன்று சுகம்தரவேண்டும் ! அசுத்தம் அகன்று விடைபெறவேண்டும் ! பழையன போக்கிடவே புதியன புகுந்திடவே அழைப்போம் ! தழைப்போம் ! போகி நன்னாளிலே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “போகிப்பண்டிகை “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! இன்றையநாள் தங்களனைவருக்கும் ஓர் மகிழ்ச்சிகரமான பொன்னாளாக மிளிரவும் .. போதியளவு மழைபொழிந்து விவசாயத்தை பாங்குறச்செய்யவும் இந்திரபகவானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தேவராஜாய வித்மஹே !
வஜ்ரஹஸ்தாய தீமஹி !
தந்நோ இந்திர ப்ரசோதயாத் !!
இந்தநாள் பழையன கழித்து .. புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது .. பழையவற்றையும் .. பயனற்றவையும் விட்டெறியும் நாள் .. பழந்துயரங்களை அழித்துப்போக்கும் இப்பண்டிகையைப் “போக்கி” என்றனர் .. அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி” என்றாகிவிட்டது .. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்துமுடிந்த நல்நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு ..
இவற்றோடு பழைய பழக்கங்கள் .. உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் .. “ருத்ரகீதை ஞானயக்ஞம்” என அழைக்கப்படும் அக்னிகுண்டத்தில் எறிந்து பொசுக்கி .. வீட்டைமட்டுமல்ல நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் .. தவறான சிந்தனைகளையும் நீக்கவேண்டும் ! என்பது இதில் உள்ள தத்துவமாகும் ..
பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன்மூலம் ஆன்மாவாவை உணர்தல் .. ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது பொங்கல் மகரசங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தையநாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது ..
இந்திரனுக்கு “ போகி “ என்றொரு பெயரும் உண்டு மழைபொழிய வைக்கும் கடவுள் வருணன் .. அவருக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவர் இந்திரன் .. மழைபெய்தால்தான் பயிர்கள் செழிக்கும் .. உயிர்கள் வாழும் எனவே பண்டைய நாட்களில் இந்திரனை போகியன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது .. இந்திரனைப் போற்றி அவரது அருட்கடாக்ஷ்த்தைப் பெற்று சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் மாசற்ற போகியினைக் கொண்டாடுவோம் !
“ ஓம் தேவராஜாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment