” ஆயிரம்கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி ! அருள்பொங்கும் முகத்தைக்காட்டி இருள்நீக்கும் தந்தாய் போற்றி ! தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி ! தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி ! தூயவர் இதயம்போலத் துலங்கிடும் ஒளியே போற்றி ! தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி ! ஞாயிறே நலமே வாழ்கநாயகன் வடிவே போற்றி ! நானிலம் உளநாள் மட்டும் போற்றுவோம் போற்றி ! போற்றி”
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ! இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியபகவானுக்கு உகந்த “ரதசப்தமி “ நன்னாளில் சூரியபகவானை வழிபட்டு நல்லாரோக்கியம் .. செல்வம் .. பகைவர்களை வெல்லும் சக்தி மற்றும் பலநன்மைகளைப் பெறுவீர்களாக !
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !!
உலகிற்கு ஒளிதரும் சூரியபகவானுக்கு உரிய விரதங்களில் மிகமுக்கியமானது “ரதசப்தமி “ ஒவ்வொரு ஆண்டும் தைமாதம் வளர்பிறை ஏழாம்நாள் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது தெற்குப்பாதையில் பயணிக்கும் சூரியன் ரதசப்தமி தினத்தன்று வடக்குவழியில் திசைதிரும்பிப் பயணிக்கிறது .. அதாவது “தட்சிணாயன காலம் “ முடிந்து “உத்தராயண காலம் “ ஆரம்பமாகிறது ..
ரதசப்தமி நாளில் சூரியன் பிறந்ததாகக் கருதப்படுவதாலும் அந்தநாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும் அன்றைய தினத்தில் விரதம் கடைபிடித்து சூரியபகவானை வழிபடவேண்டும் .. சூரியன் உதயமாகும் சமயத்தில் யாரொருவர் ஸ்நானம் செய்து பணிகளுக்கு தயாராகிவிடுகிறாரோ அவர் ஏழையாக இருக்கமாட்டார் என்கிறது சாஸ்திரம்
இன்று சூரியனுடைய பலநாமங்களில் ஒன்றின் பொருளையாவது நன்கு உணர்ந்து ஜபித்து அவரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்கள் கிட்டுவதுடன் வாழ்வின் இறுதியில் சூரியலோகத்தையும் அடையலாம் ..
சூரிய உதயநேரத்தில் எழுந்து .. ஆறு .. ஏரி அல்லது குளத்தில் நீராட்ச்செல்வது சிறப்பு .. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரியஒளிபடும் இடத்தில் நீராடலாம் .. நீராடும்போது ஏழுஎருக்கம் இலைகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி அவற்றின்மீது சிறிது அரிசி .. மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக்கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும் .. வீட்டில் நீராடும்போது அவற்றைத் தலையில் வைத்துக்கொண்டபின் தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கலாம் ..
ரதசப்தமிநாளில் வீட்டுவாசலிலும் .. பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது வழக்கம் இந்தக்கோலத்தினை வீட்டுவாசலில் போட்டு அதன் வடமாக ஒருகோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு .. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமிநாளில் பெருமாள் ஆலயங்களில் சூரியபிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார் ..
சூரியனுக்கு சர்க்கரைப்பொங்கல் நிவேதனம் வைத்து நைவேத்தியம் செய்துவிடவேண்டும் .. சூரியனுக்குப் படைத்த பின் .. பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும் இந்நாளில் துவங்கும் தொழில் .. பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும் .. இந்நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் ..
இந்நாளில் சூரியனை வழிபடும்போது -
“ ஓம் நமோ ஆதித்யாய ! ஆயுள் ஆரோக்யம் புத்திர் பலம் தேஹிமே சதா “ என்று சொல்லி வணங்குதல் சிறப்பு .. நவக்கிரகதோஷங்களில் இருந்து விடுபடலாம் ..
“ ஓம் சூர்யாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment