ஆறு காடுகள் இருந்த இடம்தான் ஆற்காடு என்று மருவி, தற்போது வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஊராக இருந்து வருகிறது. வேப்பூர், மேல்விஷாரம், புதுப்பாடி, காரை, குடிமல்லூர், வன்னிவேடு ஆகிய ஆறு ஊர்களிலும் ஈசன் அருள்பாலித்து வருகிறார். இந்த ஊர்கள் ஆரம்பத்தில் வனங்களாக, முறையே வேப்பங்காடு, எட்டிக்காடு, மாங்காடு, காரைக்காடு, மல்லிக்காடு, வன்னிக்காடு என்று இருந்தன.
ஆறு ரிஷிகளுக்கு ஈசன் காட்சி தந்து கல்ப மூலிகைகளைப் பற்றி சொல்லித் தந்த இடங்களே இவை. பாலாற்றங்கரையின் வடகரை, தென்கரைகளில் தலா மூன்று கோயில்கள் அமைந்துள்ளன. :
காஷ்யபர் ஆவாரங்காட்டில் சிவபெருமானைக் குறித்து தவமியற்றினார். அவர் மனதில், `ஈசன் என்ன தனக்கு உபதேசிப்பது' என்பதாக ஒரு கர்வம் சிறுபொழுது ஏற்பட்டு மறைந்தது. அதன் காரணமாக ஈசன் அவருக்கு நீண்ட காலம் சென்றே தரிசனம் தந்தார். கல்ப மூலிகை ரகசியங்களையும் எடுத்துரைத்தார்.

ஷடாரண்ய ஷேத்திரங்களை ஒரே நாளில் தரிசித்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

No comments:
Post a Comment