PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SARANAM...JAI SRI RAM...

#அயோத்தியா
ஆட்டோ ஒருகிலோ மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தபடுகிறது பொடி நடையாகவே நடந்து.........ராமஜன்மபூமி கோவிலை நெருங்கினோம்...... பாதுகாப்பு சோதனை, கட்டுப்பாடுகள், தரிசனம்: ஶ்ரீ ராமர் பிறந்த இடத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஊடகங்களைப் பொறுத்த வரையில் எதிர்மறையான கருத்துகள், விவரங்கள், தகவல்கள் முதலியவற்றைத் தான் கொடுத்துள்ளன, கொடுத்து வருகின்றன. அயோத்தியாவிற்கு செல்லலாம் என்று நினைத்தால் ஒருவேளை, அங்கு கலாட்டா, கலவரம் என்று ஏதாவது இருக்குமோ என்ற எண்ணம் தான் ஏற்படலாம். தசரதர் வாளிகையைத் தாண்டி செல்லும் போதே, செல்போன்கள், தோலினால் செய்யப் பட்டப் பொருட்கள், கைக்கட்காரம், பேனா, சீப்பு, பெண்களின் ஹேர்பின்கள், தலை உள்ள பூக்கள், என சகலப் பொருட்களையும் எடுத்துவிட சொல்கிறார்கள். ஆனால், செருப்பு, ஷூ போட்டுக் கொண்டு செல்ல அனுமதிக்கிறார்கள். ராமஜன்மபூமி என்ற இடத்திற்கு செல்ல கூண்டு மாதிரியான அமைக்கப்பட்டுள்ள குறுகிய வழியாக சுமார் 2 கி.மீ தூரம் வளைந்து-வளைந்து செல்ல வேண்டும். போகும் வழியில் ஐந்து இடங்களில் பக்தர்கள் பலவழிகளில் சோதிக்கப்பட்டார்கள். இது பக்தர்களுக்கு மிகவும் அதிருப்தியை, வெறுப்பை உண்டாக்குகிறது. ஏற்கெனவே இரண்டடி அகலம் உள்ள பாதையில், உட்காரக் கூட வசதி இல்லாத பாதையில், சுற்றி-சுற்றி செல்கின்ற நிலையில் அவதிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இவர்களது சோதனை தொல்லையாகத்தான் உள்ளது. வயதானவர்கள், கால் ஊனமானவர்கள் அல்லது நடப்பதற்கு கஷ்டமாக உபாதை கொண்டவகளுக்கு இவ்வாறு செல்ல மிகக்கடினம் தாம். ஒன்று-இரண்டு இடங்களில் குடிக்க தண்ணீர் உள்ளது, மற்றபடி வேறெந்த வசதியும் இல்லை. இவ்வாற் கஷ்டப்பட்டு சென்றால், சுமார் 20 அடி தூரத்தில் வைக்கப்பட்டுள்ள சிறிய ராமர், லக்ஷ்மணர் மற்றும் சீதை விக்கிரங்களை நொடிகளில் தரிசனம் செய்து சென்று விடுங்கள் என்று விரட்டுகிறார்கள். தரிசனம் செய்து வெளியே வர 30-45 நிமிடங்கள் ஆகின்றன. கடவுளை தரிசிக்க வரும் பக்தர்கள் இவ்வாறு சதாய்க்கப்பட வேண்டுமா என்று பக்தர்களின் மனத்தில் சிந்தனை எழத்தான் செய்கிறது. ஆனாலும்
ஸ்ரீ ராமர் பிறந்த இடத்தை பார்த்து திவ்யதேச கணக்கில் அயோதியை டிக் அடிப்பதில் மகிழ்சியே
இனி நான்குவருடம் கழித்து அழகிய கோயிலாகதான் அயோதியை தரிசிக்கமுடியுமாம்.
இன்னும் ஒரிருமாதங்களில்
கட்டுமான பணி ஆரம்பிக்க போகிறதாம்...
பளிங்கு கோயிலில்
ராமசந்திர மூர்த்தியை......
பார்கலாம்.

Image may contain: sky and outdoor

Image may contain: outdoor
Image may contain: sky and outdoor
Image may contain: one or more people, tree, sky, outdoor and nature
Image may contain: 5 people, crowd and outdoor
......

No comments:

Post a Comment