கலங்கி நிற்கிறோம் ஐயனே...
தவறு செய்த குழந்தையை
சமயத்தில் தாயே அடித்து விடுவாள்.
ஆனால் ஆறுதல் தேடி
அந்தத் தாயிடமே
குழந்தை சரணடையும்.
தாயும் அரவணைத்துக் கொள்வாள்...
அதுபோல செய்வதுஅறியாது இப்போது
உன்னையே சரணடைகிறோம் ஐயனே..
ஐயனே உன் அன்பையும்,
கருணையையும்
தோற்கடிக்க கூடிய
மற்றொரு அன்பையும்,
கருணையையும்,
உலகில் யாரும்,
எப்போதும், எங்களுக்கு
தரப் போவதே இல்லை ஐயனே...
உன்னை தவிர....!
நீயே உற்ற துணை என் ஐயனே...
இன்பமே எந்நாளும் துன்பமில்லை...
அருள் செய் என் ஐயனே...
ஸ்வாமியே சரணம் ஐயப்பா...

No comments:

Post a Comment