கற்பூரம் சுற்றி கண்களில் ஒற்றி கரத்தினில் மங்கள கங்கணம் கட்டி நின் பொற்பதம் சேவித்து பூக்களும் தூவி புண்ணியம் அடைவோம் ! அன்னையே வருக ! சௌபாக்கியலக்ஷ்மி நீ வருவாய் ! எம் மனை மங்களம் பொங்க சௌபாக்கிய லக்ஷ்மி நீ வருவாய் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த இனிய வந்தனங்கள் .. நாளை மங்களகரமான வெள்ளிக்கிழமையில் (31.07.2020) சௌபாக்கியம் தரும் “ வரலக்ஷ்மி நோன்புபை “ அனைத்து சுமங்கலிகளும் தாலிபாக்கியத்துக்காகவும் .. சுபீட்சம் நிறைந்த நல்வாழ்விற்காகவும் .. கணவனின் நல்லாரோக்கியத்திற்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்வர் ..
அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பமெல்லாம் அன்னையினருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ .. இன்றோடு துயர்விலக அன்னை வரலக்ஷ்மியை முழுமனதுடன் மனமாரத் தியானித்து அவளைச் சரணடைய வேண்டிய நன்னாளுமாகும் ..
அஷ்டலக்ஷ்மிகளும் ஒரேரூபம்கொண்டு நம் இல்லத்தில் வரலக்ஷ்மியாக எழுந்தருளும் இந்த ஆடி ஆவணி மாதத்தின் தொடக்கத்தில் அல்லது இறுதியில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமையில் இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜைசெய்து மகிழும் ஓர் நன்னாளாகும் ..
நாளை முழுவதும் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம் .. கனகதாரா ஸ்தோத்திரம் படிப்பதோ கேட்பதோ சிறப்பாகும் .. லக்ஷ்மிதேவி தன் பக்தர்களுக்கு பொருள்வளத்தை மட்டுமல்லாது உயர் ஞானத்தையும்.. வித்யா சக்தியிலிருந்து நல்ல கல்வியையும் அருள்பவள்
மஞ்சள் கயிறு மங்களத்தின் அறிகுறி .. அஷ்டலக்ஷ்மிகளுடன் வரலக்ஷ்மியையும் சேர்த்து ஒன்பது லக்ஷ்மிகள் என்று சாஸ்திரம் கூறுகிறது .. எனவே நூல் இழைகளால் ஆன ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக்கயிற்றினை பூஜையில் வைத்து
“ எங்கள் வீட்டிற்கு வந்து அமர்ந்திருக்கும் தாயே ! எப்போதும் எங்கள் இல்லத்திலிருந்து வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக “ என்று வேண்டிக்கொண்டு வலது கைமணிக்கட்டில் கணவரின் ஆயுளுக்கும் வேண்டிக்கொண்டு பக்தி சிரத்தையுடன் மூன்றுமுடிச்சுகள் போட்டு அதனைக் கட்டிக்கொள்ளல் வேண்டும் ..
No comments:
Post a Comment