இன்று ..
பழைய புத்தக கடையில் கிடைத்த சபரிமலை ஐயப்பன் வரலாற்று புத்தகத்தில்...
சிறிதும் எதிர்பார்க்கா ஆச்சர்யம்..
அதில்...
ஓவியங்களுடன் கூடிய ஐய்யனின் வரலாறு..
அத்துடன் சபரிபமலையின் புகைப்படங்களும்..
அதுவும்
1980களில் இருந்த சபரிமலையின் படங்கள்...
இன்றைய தலைமுறை பார்த்திராத சபரிமலை..(நானும்)
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பதன் நிஜ அர்த்தம் சொல்லும் கான்கிரீட் கானாத மலைப்பாதை..
கிராமத்து கோவிலைப்போன்று எளிமையான நாகரிக பூச்சு இல்லாத எரிமேலிக் கோவில்..
பிரம்மாண்டமில்லா அமைதியான வாவர் கோவிலும் மசூதியும்..
கூரை வெய்யப்பட்ட சால்கள் நிறைந்த பம்பா...
ஆள் ஆரவாரமற்ற பம்பா..
,யானைகள் நிறைந்த பம்பா..
சுப்ரமணிய பாதை பிரிவு...
பம்பை நதிக்கரை கணபதி கோவில்...
அப்பாச்சி மேடு,சபரி பீடம்,மரக்கூடம்,சரங்குத்தி..
தங்க தகடு வெய்யப்படாத ஐய்யன் சன்னிதானம்..
தென்னை மரங்கள் பின்னனியில் கன்னி மூல கனபதி....
அத்தனையும் அட்டகாசம்..
ஐயப்பனின் இந்த வரலாற்று புத்தகம் கார்த்திகை மாதத்தில் எனக்கு கிடைத்ததும் ஆச்சர்யமே...
இந்த புத்தகத்தை எழுதிய பி.டி.பாஸி அவர்களுக்கும்..
இந்த புத்தகத்தை பதிப்பித்த ஸ்ரீனிவாஸ் இண்டஸ்ட்ரீஸ். சிவகாசி நிறுவனத்திற்கும் நன்றிகள் பல..
சுவாமியே சரணம் ஐய்யப்பா...







(ஒவ்வொரு படங்களின் முதல் கமெண்டில் அதே இடத்தின் இப்போதைய படங்களும்)
எளிமையான எரிமேலி..
வாவர் சன்னதி
![]() |
பம்பா..பழமை மாறா பம்பா. |
குடிசை சால்கள்..மனதுக்கு நெருக்கமான எளிமை..
ஆள் ஆரவாரமற்ற பம்பா...
யானைகளின் சுதந்திர குளியல்..பம்பா
பம்பா கணபதி...
கணபதி கோவில்..
சுப்ரமனிய பாதை பிரிவு..
சுப்ரமணிய பிரிவு பாதையில்...
நீலி மலை... மரத்துண்டுகளே படிகளாய்
அப்பச்சி மேடு...இப்போதிருக்கும் பாதுகாப்பு வசதிகள்,கடைகள் எதுவுமில்லா அப்பாச்சி மேடு..
சபரி பீடம்
அப்பாச்சி மேடு கடந்ததும் வரும் பாதை.
சுப்ரமணிய பாதையும் நீலி மலைப்பாதையும் சந்திக்கும் மரக்கூடம்.
சரங்குத்தி
சரங்குத்தியிலிருந்து சன்னிதானம்..
மிகப்பிரம்மாண்டமான தங்குமிடம்..ஓலையால் வெய்யப்பட்ட சால்..
தங்கத்தகடு இல்லாத 18ஆம் படி..
இதை தொட்டு வனங்கி தேங்காய் முதல் படியில் உடைத்தது இன்னும் பசுமையாய் மனதில்..
நாகரீக மாறுதல்கள் இல்லா சன்னிதானம்..
கன்னிமூல கணபதி..தென்னைமரங்கள் சூழ..
மளிகைபுரத்தம்மன்,கடுத்த சாமி கோவில்..
இருமுடி இல்லாதவர்கள் ஏறும் வடக்குப்படி..
No comments:
Post a Comment