Swamy saranam...Guruve saranam...மஹாபாரதத்தில் குருஷேத்திரபோர் நடந்து 36 ஆண்டுகள் கடந்து விட்ட பிறகு, பின்னர் ஒருநாள் காட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த கிருஷ்ணனை ஜாரன் என்ற வேட்டைக்காரன், மான் என நினைத்து அம்பெய்தினான். பின்பு, கிருஷ்ணன் கோலோகா பிருந்தாவனத்திற்கு பூமியிலிருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வே கிருஷ்ணர் பூமியிலிருந்து வைகுண்டத்திற்குப் புறப்பட்ட நிகழ்வாக கருதப்படுகிறது. இந்நிகழ்வைக் கண்ணால் கண்டவர்கள் அஸ்தினாபுரத்திலிருந்த பாண்டவர்களுக்கும் துவாரகை மக்களுக்கும் தகவல் கூறியதாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணர் பூமியிலிருந்து புறப்பட்டு வைகுண்டத்திற்குச் சென்ற இடமே பால்கா என்று அறியப்படுகிறது.

 









No comments:

Post a Comment