PANVEL BALAGAR
Swamy Saranam..Guruve Saranam. #நேமம் கோயிலின் மூலவராக ஜெயங்கொண்ட சோளீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி சௌந்தரநாயகி ஆவார். கோயிலின் முன்பாக கோயில் தீர்த்தமான சோழ தீர்த்தம் உள்ளது. கோயில் ஐந்து நிலை ராஜ கோபுரத்தைக் கொண்டு அமைந்துள்ளது. கோயில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. தல விநாயகர் ஆவுடையில் உள்ளார். இரு திருச்சுற்றுகளைக் கொண்ட இக்கோயிலில் பைரவர் மேற்கு நோக்கி உள்ளார். ஜெயங்கொண்ட விநாயகர், முருகன், விசுவநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சன்னதிகள் உள்ளன. அசுரர்களிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள தேவர்கள் சிவனை வழிபட வந்தனர். அப்போது யோக நிலையில் இருந்த அவரை எழுப்புவதற்காக மன்மதனை வேண்ட, மன்மதன் சிவன்மீது மலர்க்கணை தொடுத்தார். சிவன் தன் கண்களைத் திறந்து அவரைச் சாம்பலாக்கினார். ஆதலால் மூலவர் ஜெயங்கொண்ட சோளீசுவரர் என்றழைக்கப்படுகிறார்...This temple is located near Nemam village Sivagangai tirupattur taluk tamil nadu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment