PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

Swamy saranam.. Guruve saranam

 

இன்று சங்கடஹர  சதுர்த்தி தோன்றிய கதையும்,

பிள்ளையார் எறும்பு என அழைக்கப்படுவதற்க்கான காரணமும்:


அன்று  கிருஷ்ணபட்ச  பஞ்சமி . சிவ கைலாயத்தில் அம்மையும் அப்பனும் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அப்போது பார்வதிக்கு ஒரு விளையாட்டு ஆசை ஏற்பட்டது. 


 'தினமும் நாம்  அனைவருக்கும்  உணவு தருகின்றோம். ஒரு நாள் கொடுக்காவிடில் என்ன ஆகும். அவை  இன்று பட்டினியால்  கிடக்கட்டும் . நாளை பார்ப்போம்'  என எண்ணியவள் தனது அருகில் சென்று கொண்டு இருந்த சிறிய கருப்பு நிறத்தில் இருந்த எறும்புகளை பிடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிவிட்டாள்.   


மறுநாள்  அதைத் திறந்து பார்த்தாள். அவை அனைத்தும் அப்போதும் உயிருடன் இருந்தன. அதை விட ஆச்சர்யமாக எல்லாவற்றின் வாயிலும் சிறிது வெள்ளையாக உணவு ஒட்டிக் கொண்டு இருந்தது.   


பார்வதிக்கு  ஒரே குழப்பம். அவைகளுக்கு எங்கிருந்து உணவு கிடைத்தது?  தான் தவறு செய்து விட்டோம் எனவும் அனாவசியமாக ஜீவராசிக்கு தொந்தரவு கொடுத்து விட்டோமே என நினைத்து அதற்கு பிராயச்சித்தம் தேட தானும் பட்டினி  இருந்து தபஸ் செய்யக் கிளம்பியபோது  எதிரில் பிள்ளையார் வந்து கொண்டு இருந்தார். 


அவர் வயிறு ஒட்டி உலர்ந்து வாடிப் போய் இருந்தது.  ஒரே நாளில் அவர் இளைத்து இருப்பதைக் பார்த்த பார்வதி கவலைப்பட்டு அதற்கான காரணத்தை அவரிடம் கேட்க பிள்ளையார் கூறினார். 


அம்மா, நீங்கள் அந்த சிறு எறும்புகளைப் பட்டினி போட்டுவிட்டு எனக்கு மோதகமும் அப்பமும் வயிறு நிறையத் தந்தீர்கள்.  ஆனால் அந்த சிறு ஜீவராசிகள் பட்டினியினால் வாடுவதைப் பொறுக்க முடியாமல் நான் எனக்கு நீங்கள் தந்த உணவை சாப்பிடாமல் அவைகளுக்குக் கொடுத்து விட்டேன்" என்றார். 


அதைக் கேட்டு மகிழ்ந்து போன பார்வதி தனது தவறை உணர்ந்தாள். ஆனாலும் அந்த சம்பவம்  மூலம் இந்த உலகுக்கு ஒரு சேதி கிடைத்ததே என எண்ணி  தனது பிள்ளைக்கு ஒரு ஆசிர்வாதம் தந்தாள். 


"இன்று இந்த அறிய செயலை நீ செய்ததினால் இன்று முதல், அதாவது ஒவ்வொரு கிருஷ்ணபட்ஷ சதுர்த்தியிலும் தமது சங்கடங்களை விலக்கிக் கொள்ளும் நாளாக பக்தர்கள் உனக்கு பூஜை செய்து வழிபடுவார்கள்.


 அதுவே சங்கடஹர  சதுர்த்தி என அழைக்கப்படும். அன்று உன்னை பூஜிப்பவர்களுக்கு பெரும் நன்மை உண்டாகும் " ஆகவேதான் அந்த கருப்பு எறும்புகளுக்கு பிள்ளையார் எறும்பு என்ற பெயரும் ஏற்பட்டது.

. நோயை தீர்க்க “உக்ரயோகங்கள்”


 நம் வேதங்கள் நோய்க்கு தீர்வு ஜோதிடத்தில் பண்டய காலத்திலேயே எழுதப்பட்டு இருக்கிறது .


“நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைகள் பல எடுத்தும் பயனில்லை என்று சொல்வோர்களை தான் இப்போதெல்லாம் அதிகமாக காண முடிகிறது !!!!!

மருந்துகள் சரியில்லையா ?????

மருத்துவர் சரியில்லையா ???**

நோய் தீரும் எனும் நம்பிக்கை இல்லாமல் போகும் காரணம் தான் என்ன எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று கவலையோடு இருப்போர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் தரும் பதிவு இது !!!!

(நாள் செய்யாதை நல்லாரும் செய்யார் )

காலப்ரகாசிகை எனும் அற்புதமான நூலை புரட்டிய போது சிக்கிய தகவல்களை கொஞ்சம் நீங்களும் வாசியுங்கள் !!!!!

“உக்ர யோகங்கள் ”

(தீரா நோய் தீர சிகிச்சைக்கு உகந்த நாட்கள் )


திருதியை அல்லது அஷ்டமி உடன் கூடிய ரோஹிணி நட்சத்திரம் நாள் !!!!


சதுர்த்தி அல்லது அஷ்டமி உடன் கூடிய உத்திர நட்சத்திரம் நாள்

பஞ்சமி திதியும் திருவோணம் கூடிய நாள்


சஷ்டி திதியுடன் மிருகசீரிடம் நட்சத்திரம் கூடிய நாள்


சப்தமி திதியுடன் ரேவதி நட்சத்திரம் கூடிய நாள்


நவமி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் கூடிய நாள்


தசமி திதியுடன் பூசம் நட்சத்திரம் கூடிய நாள்


திருதியை அல்லது துவாதசி திதியுடன் அனுஷம் நட்சத்திரம் கூடிய நாள்


ஏகாதசி திதியுடன் கிருத்திகை நட்சத்திரம் அல்லது மகம் நட்சத்திரம் கூடிய நாள்


தசமி திதியுடன் ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாள்


திரயோதசி திதியுடன் உத்திரம் நட்சத்திரம் கூடிய நாள்


போன்றவை “உக்ர யோகங்கள் “என்ற பெயரில் அழைக்கப்படுகிறது !!!

“உக்ர யோகங்கள் “நாளில் தீர்க்க முடியாத நாள்பட்ட வியாதிகளுக்கு சிகிச்சைகள் எடுத்தால்

“நோய் தீரும் “என்கிறது

“காலப்ரகாசிகை “ஜோதிட நூல்

எதை செய்தாலும் முதலில் அதன்மேல் நம்பிக்கையை வைத்து முயற்சி செய்யுங்கள் !!!

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் “””

எல்லோரும் இன்புற்று இருக்க !!!!!!

எல்லாம் வல்ல “தன்வந்திரி பகவான் “அருள்புரியட்டும்.

No comments:

Post a Comment