🙏ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தியும், வைகாசி விசாகமும் இணைந்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க சிறந்த நாளாக கருதப்படுகிறது.
🙏முருகப்பெருமானும் நரசிம்மரும் நவக்கிரகங்களில் செவ்வாயின் அம்சம் கொண்டவர்கள் ஆவர். செவ்வாய் கிரகத்திற்கு காரகர் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக உருவாக அனைவரும் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.
☘️இன்றைய தினம் காலையில் ஸ்ரீநரசிம்ம வழிபாடு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபட ஏற்ற நேரமாக உள்ளது இந்த நேரத்தில்...
ஓம் உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் பீஷணம் பதிரம் மிருத்யும் மிருத்யும் நமாம்யஹம்
☘️என்னும் மந்திரத்தை 32 முறை சொல்ல வேண்டும்.
அந்த நேரத்தில் வீடு முழுவதும் வென்கடுகு கலந்து சாம்பிராணி புகை வீடு முழுக்க பரவ விட வேண்டும்.
☘️இன்றைய தினம் மாலை நேரத்தில் 6 மணிக்கு, முருகனின் வெற்றி தரும் மந்திரம்
☘️ ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் முழுவதுமாகப் பாராயணம் செய்ய வேண்டும், அவ்வாறு பராயணம் செய்ய இயலாதவர்கள் கீழ்க்கண்ட இரண்டு வரி முருக மந்திரம் பாராயணம் செய்து சொல்லலாம்.
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
☘️மாலை நேரத்திலும் சாம்பிராணியில் வெண்கடுகு கலந்து வீடு முழுக்க சாம்பிராணி புகை காட்ட வேண்டும்.
☘️எதுவுமே தனித்து செயல்பட்டால் பலம் இல்லை, எதுவும் நடக்கப் போவதில்லை,, அனைவரும் ஒன்று பட்டு இந்த நல்ல நாளை பயன்படுத்தி இருக்கும் உயிர்களை யாவது காப்பாற்றுவோம்.
☘️கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் நரசிம்மரும், வெற்றியையே மாலையாக சூடிக்கொண்ட முருகனும் இவர்கள் இருவரையும் ஒருசேர ஒரே கணத்தில் வழி படுவோம்
சுவாமி சரணம்.....குருவே சரணம்!!
No comments:
Post a Comment