SWAMY SARANAM..GURUVE SARANAM...ஜோதிர் லிங்கப்பயணம் மனதுக்கு ரம்மியமான மலைப்பாதை; வழி நெடுக காடுகளும், பள்ளத்தாக்கும் நிறைந்த சாலை; பல்வேறுபட்ட மூலிகைகளின் மணம் இவற்றை அனுபவித்தபடி பீமாசங்கர் கோயில்,உள்ளே செல்கிறோம்... இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப் போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணக்கதை. பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவனால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான். இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. பீமாசங்கர் இறைவனை தரிசித்தபின் நம் மனம் அமைதி அடைவதோடு, அனைத்தும் மறந்து ஈசனுடன் ஐக்கியமாகிறது. பீமாசங்கர் வாழ்வில் நாம் அவசியம் தரிக்க வேண்டிய புண்ணியத் தலமாகும்.

 











No comments:

Post a Comment